Wednesday 17 October 2012

இந்திய உளவுத்துறையில் சிங்களம் தெரிந்தவர்களுக்கு வேலை!

இந்திய உளவுத்துறையில் சிங்களம் தெரிந்தவர்களுக்கு வேலை
திங்கட்கிழமை, 15, அக்டோபர் 2012 (19:8 IST) நக்கீரன்

இந்திய மத்திய உளவுத்துறையான ‘ரா’ இந்தியாவின் அயல்நாடுகளில் பேசப்படும் சிங்களம் உட்பட்ட மொழிகள் தெரிந்தவர்களை உளவுத்துறையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, அயல்நாட்டு மொழி அறிவுடைய மிக சிலரே 'ரா' RAW - உளவுத்துறையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்களம் (இலங்கை), பாஸ்தோ ( ஆப்கான் ), தாரி ( ஆப்கான் மற்றும் ஈரானில் சில பகுதிகள்), மியான்மாரி ( மியான்மார்), மான்டரின், கான்டனீஸ் ( சீனா) ஆகிய மொழிகளை அறிந்தவர்கள் ரா அமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என தெரியவருகிறது.

இவர்களில் சிங்களம் தெரிந்தவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவிலும், மற்றைய மொழி அறிந்த வர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் நியமனம் செய்யப்படவுள்ளனர் என அறிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...