SHARE

Wednesday, October 17, 2012

வடக்கில் கஜூ பயிர்ச்செய்கை மேற்கொள்ள விஷேட திட்டம்

வடக்கில் கஜூ பயிர்ச்செய்கை மேற்கொள்ள விஷேட திட்டம்
By S.Raguthees
2012-10-15 18:40:46

வடக்கு, கிழக்கில் கஜூ - மரமுந்திரிகை- மற்றும் கரும்பு பயிற்செய்கையினை பாரிய அளவில் மேற்கொள்வதற்கான இடங்கள் பலவற்றை அடையாளம் கண்டுள்ளதாகவும், வெகு விரைவில் அவ்விடங்களில் இப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவுள்ளதாக சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி , முல்லைத்தீவு, மாங்கேணி, மட்டக்களப்பு, சிலாபம் உள்ளிட்ட பல பகுதிகளில் கஜூ மற்றும் கரும்பு பயிர் செய்கையினை மேற்கொள்ளவுள்ளதுடன் அதனூடாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளதாகவும் சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கையினை மேம்படுத்துவதற்காகவே இவ்வாறான விஷேட வேலைத்திட்டங்கள் மேகொள்ளப்பட்டு வருகிறது. கஜூ, மிளகு, கறுவாப் பட்டை உள்ளிட்ட பல பொருட்களுக்கு உலக சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. இருந்தும் அந்த நாடுகளில் கேள்விக்கு ஏற்ப எம்மால் இந்தப் பொருட்களை வழங்கமுடிந்தால் பெருந்தொகையான அன்னியச் செலாவணியை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது நாம் இவ்வாறான சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கை மூலம் பெற்றுக் கொள்கின்ற வருமானத்தை மேலும் பன்மடங்கு அதிகரித்துக் கொள்வதுடன் அதனூடாக மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதே தமது நேக்கமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ஆனந்தபுர வழக்கு

ஆனந்தபுர வழக்கு 16 ஆம் ஆண்டு நினைவு ( மறு பிரசுரம்; முதல் வெளியீடு Monday, 4 April 2016, இரண்டாம் வெளியீடு 04-04-2025) முதல் ஈழ  யுத்தம்[197...