150 விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகசின் சிறையில் இரவிரவாக தேடுதல்
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 02:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புதினப் பலகை
சுமார் 150 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள, மகசின் விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல் சுமார் இரண்டு மணிநேரம் வரை நீடித்தது.
இந்தத் தேடுதலுக்கு, குண்டுகள், உலோகங்களை கண்டுபிடிக்கும் – மெட்டல் டிடெட்டர்- கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தேடுதலின்போது, சிறைச்சாலையின் பல்வேறு இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த செய்மதித் தொலைபேசிகள் உள்ளிட்ட 36 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள சிறைக்கைதிகள் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்துள்ளதாகவும், இந்த தொலைபேசிகளை சிறைக்குள் கொண்டுவர சிறைச்சாலை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து விடுதலைப் புலிகளின் சந்தேகநபர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த சிறைகாவலர்களை அடையாளம் காணும் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தேடுதலை அடுத்து 57 கைத்தொலைபேசிகள் அங்கு கைப்பற்றப்பட்டன.
அதையடுத்து, கொழும்பு, அனுராதபுர, காலி, நீர்கொழும்பு, மகர சிறைகளிலும் தேடுதல்கள் நடத்தப்பட்டு 100இற்கும் அதிகமான கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment