SHARE

Wednesday, July 11, 2012

வவுனியா சிறைப்படுகொலை:மரணத் தறுவாயில் மற்றொரு கைதி

கோமா நிலையில் உயிருக்குப் போராடும் மகனை காப்பாற்றுமாறு தாய் உருக்கமான வேண்டுகோள்!

[ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 07:10.48 AM GMT ]

வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்டு மகர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது ராகம வைத்தியசாலையில் இரண்டு கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கோமா நிலையிலுள்ள தமது மகனான முத்துராஜா டில்ரூக்‌ஷனைக் காப்பாற்றுமாறு அவரது தாயார்
உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தமது மகன்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவர் எனவும் மன்னார் இலுப்பைக்கடவையைச் சேர்ந்த இந்தப் பெண் தெரிவித்தார்.
இவர் தன்னுடைய கணவர் அந்தோனி முத்துராசா மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் சகிதம் நேற்று மன்னார் நகருக்கு வருகை தந்து மன்னார் மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், மன்னார் மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம் ஆகியோரைச் சந்தித்து தமது மகனைப் பாதுகாப்பதற்கு உதவுமாறு உருக்கமாகக் கோரியுள்ளார்.

முத்துராஜா டில்ரூக்‌ஷன் 2006 ஆம் ஆண்டு தொழில்வாய்ப்புப் பெற்று கட்டார் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தமது குடும்பத்துடன் அடிக்கடி தொடர்புகொண்டுள்ளார். இந்தநிலையில் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் நாடு திரும்பிய பின்னர்  இவர் மன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அப்போது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டிருந்த அவர், மன்னார் பகுதியில் போர் இடம்பெற்று அவரது குடும்பத்தினர் அங்கிருந்து இடம்பெயர்ந்த பின்னர் தொடர்பற்றிருந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வாரம் இவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் அங்கு சென்று அவரைப் பார்த்துள்ளனர். தமது மகன் இரு கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும்
தெரிவித்த தாயார், தமது மகனைக் காப்பாற்ற உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நிமலருபன் மரணத்திற்கு நியாயம் வேண்டும் - கோட்டை புகையிரத நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!

[ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 03:46.57 PM GMT ]

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 'அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான அமைப்பு' அழைப்பு விடுத்திருந்தது.

நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிமலரூபனின் படுகொலை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலர்
கட்சி, மத பேதம் பாராது கலந்து கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பலைகளையும் வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டார், நிமலரூபனின் படுகொலையை அடுத்து அவருக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதற்காக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்
கட்சிகள் ஒன்றினைந்து ஒருமித்து குரல் எழுப்புகின்றோம்.

நிமலரூபனைப் படுகொலைச் செய்தது இந்த அரசாங்கமே. தமிழ் அரசியல் கைதிகளை அடித்து துன்புறுத்தி நாட்டின் பல்வேறு சிறைகளிலும் அடைத்து வைத்திருக்கும் இந்த அரசாங்கம் அவர்களுக்கு தேவையானவர்களை மாத்திரம் விடுதலைச் செய்கின்றது.

அந்த வரிசையில் கருணா, பிள்ளையான், கே.பி, ஏன் தமிழினியையும் விடுதலை செய்துள்ளது.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
நிமலருபன் தொடர்பில் அரசு இழைத்திருப்பது பாரிய தவறு என்பதுடன், இது பாரிய கொலையாகும். இந்த கொலைக்கு அரசாங்கம் கூடிய விரைவில் பதில் தரவேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளாரும் நாம் இலங்கையர் அமைப்பின் தலைவருமான உதுல் பிரேமரத்ன இவ்வாறு தெரிவித்தார்,

விடுதலைப் புலிகள் என அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எமது சகோதரர்கள் என குறிப்பிடுவதற்கு நான் அச்சப்படமாட்டேன். இவ்வாறான ஒரு சகோதரனையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்தனர்.
அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினரால் விசேடமாக கொழும்பிலிருந்து சென்ற சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு நிமலரூபன் உயிரிழந்துள்ளார்.

இதனை நாம் மறக்க கூடாது. இது சாதாரண ஒரு விடயமல்ல. கைது செய்யப்பட்டு அரச பாதுகாப்பு பிரிவின் பாதுகாவலில் இருந்த ஒருவர் அடித்துக் கொல்லப்படுவதானது ஒரு பாரிய விடயமாகும். இதனை யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த தாக்குதலானது இந்த நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை இல்லை, அப்படி உரிமை கோரினால் தடியடிப் பிரயோகம் நடத்தப்படுவதுடன், மண்டை உடைக்கப்படும் என்பதனையே வெளிப்படுத்தியுள்ளது.

எனவே கொல்லப்பட்ட நிமலருபனுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதுடன், அவரது இறுதிக் கிரியைகள் அவரது சொந்த கிராமத்திலேயே நடத்தப்படவேண்டும் எனவும் உதுல் பிரேமரட்ண வலியுறுத்தினார்.


நிமலரூபன் படுகொலைக்கு அரசே பதிலளிக்க வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் மனோ தெரிவிப்பு     
7/10/2012 4:47:02 PM 
    
 நிமலரூபனை படுகொலை செய்தது இந்த அரசாங்கம் தவிர வேறு யாரும் இல்லை. நிமலரூபனின் படுகொலைக்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசில் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் இன்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நிமலரூபனின் படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களக் கட்சிகளின் உறுப்பினர்கள் இங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிமல ரூபனை படுகொலை செய்தது இந்த அரசாங்கமே. இந்தக் கொலைக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும்.

இதேவேளை மேலும் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டு அநுராதபுரம், ராகம, கண்டி போகம்பர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அரசாங்கத்தால் விரும்பப்பட்ட கே.பி, தமிழினி, கருணா அம்மான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பலர் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். ஆனால், அரசாங்கத்தால் விரும்பப்படாத அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வில்லை. இதுதான் நீதியா அல்லது
மஹிந்த சிந்தனையா எனக் கேள்வியெழுப்பினார். 

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...