SHARE

Thursday, March 22, 2012

இந்திய இலங்கைப் போர்க்குற்ற அரசுகளை எதிர்த்து ம.ஜ.இ.கழகம் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் இலங்கை மீதான மேலாதிக்க நோக்கம் கொண்டதே!

1. இன அழிப்பு போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்றுவோம்!
2. ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சோனியா, மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளிகளே!
3. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பேரால் இராஜபட்சேவுக்கு ஆதரவளிப்பது சிங்களப் பேரினவாத பாசிசத்தையே வலுப்படுத்தும்!
4. ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஒன்றுபட்ட போராட்டமே ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கும்!
5. சிங்களப் பேரினவாத இராணுவப் பாசிசத்திலிருந்து ஈழத்தமிழரை விடுதலை செய்யப் போராடுவோம்!
6. தமிழீழப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தை வெளியேற்றப் போராடுவோம்!
7. நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கு!
8. தமிழர் பகுதிகளிலுள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றப் போராடுவோம்!
9. வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து, அதை ஈழத்தமிழர்களின் தாயகமாக அங்கீகரிக்கப் போராடுவோம்!
10. ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!
11. சிங்களப் பேரினவாத பாசிசத்திற்கு எதிரான இலங்கைவாழ் இரு இனமக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஜனநாயகத்தை நிலைநாட்டும்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு

இம்முழக்கங்களை முன் நிறுத்தி பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம்
காலம்: 22-03- 2012
நேரம்: மாலை 4 மணிக்கு
இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை

தொடர்புக்கு: தோழர் டேவிட் செல்லப்பா தொலைபேசி 9382815231 / 8098538384/ e-mail samaran1917@gmail.com


No comments:

Post a Comment

COVID-19 (2020 ), its economic impact continues

COVID-19 shut us down five years ago. Here's how its economic impact continues By  Canan Sevgili ,  Paolo Laudani ,  Alessandro Parodi  ...