SHARE

Thursday, January 12, 2012

புதிய ஈழத்தில் ஆணைக்குழு அறிக்கை பற்றிய பரிசீலனை

படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு பரிசீலனை.


சிங்களத்தை நன்கறிந்த ஈழத்தமிழ் மக்களுக்கும், புரட்சிகர ஜனநாயகச் சக்திகளுக்கும், இந்தப் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கை ஒரு கண்துடைப்பு என்பதை கட்டுரை எழுதி விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

போர்க்குற்றம் இழைத்த சிங்களத்தை தண்டிக்க வேண்டுமென உலக மக்கள் கோரியபோது, ஐநா சபை சிங்களத்தையே அவ்வாறு ஒரு விசாரணையை நடத்துமாறு கோரியது. அமெரிக்காவும் அதையே கோரியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் அதையே கோரினர். ஆக ஐநா சபையின் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் வேண்டுகோளுக்கமைய சிங்களம் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை போர்க்குற்றம் தொடர்பில் இரு அடிப்படைக் கோட்பாடுகளில் ஆதாரப்பட்டு நிற்கிறது.

1. இந்த யுத்தம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான மனித நேய நடவடிக்கை.

2. மனித நேய நடவடிக்கையில் நாம் பயங்கரவாதிகளுடன் போரிட்டோம். பயங்கரவாதிகளான புலிகள் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத அரசு
சாராத அங்கத்தவர்களாவர். இதனால் அரசுகளுக்கு எதிராக நடக்கும் யுத்தங்களில் கடைப்பிடிக்க வகுக்கப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளை (International Humanitarion Laws) இத்தைகைய போர்களுக்கு பொருத்தக் கூடாது.

இந்தக் கோட்பாடுகளின் மூலகர்த்தாக்கள் சிங்களமோ அல்லது பக்ச பாசிஸ்டுக்களோ அல்ல. மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புஷ், சென்னி, ரம்ஸ்பீல்ட், பாசிஸ்ட்டுக்கள் வகுத்தளித்து கடைப்பிடித்த கோட்பாடுகள் தான் இவை. ஆப்கானிஸ்தானிலும். ஈராக்கிலும் பயன்படுத்தப்பட்டவைதான் இவை. பயங்கரவாதிகளை சர்வதேச மனிதநேயச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தக் கூடாது என்ற அடிப்படையில் தான் நாடுகடந்த வதை முகாம்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் 10 ஆண்டு நிறைவு கண்ட, கியூபா, குவாண்டனோமாவில் அமைக்கப்பட்ட டெல்டா 4 என்கிற வதை முகாமாகும். தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூடக் காற்றில் பறக்கவிட்டு ஒபாமா அந்த வதை முகாமைக் கூட மூடவில்லை.

LLRC அறிக்கைக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாதென ஐ.நா கருதுவதாக இன்னசிற்றி பிரஷ் (Innercity Press),கருத்து வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பிரளயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, பக்‌ச பாசிஸ்டுக்களுக்கு எதிரான போர்க்குற்ற இயக்கத்தை ஒபாமாவையும், ஐநாவையும் சார்ந்து நின்று நடத்தக் கூடாது, மாறாக உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் சார்ந்து நின்று நடத்த வேண்டுமென நாம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றோம். இதற்கு மாறாக ஒபாமாவினதும் ஏகாதிபத்தியவாதிகளினதும் `கவனத்தை ஈர்க்க` ஐநாவுக்கு நீதிப்பயணம் நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எந்த ஒபாமாவினதும் ஐநாவினதும் கோட்பாடுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதுவோ அவர்களிடம் நீதிகேட்கிற போலிப் போராட்டங்களின் போக்கிரித் தனமும் அப்பலமாகிவிட்டது. இவர்களை நம்பி இவர்களின் பின்னால் அணிதிரண்ட மக்களின் கதை மண்குதிரையை நம்பி கடற்பயணம் செய்த கதையாகிவிட்டது.

( மேலும் )

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...