SHARE

Monday, August 29, 2011

சிலப்பதிகார கண்ணகி வழியில் `நெருப்பானாள் செங்கொடி! கண்ணகி விழாவில் வைகோ முழக்கம்

இனமானத் தமிழ்ச் சமரசவாதிகளே,
அ.தி.மு.க, தி.மு.க ஆளும்வர்க்கக் கட்சிகளே,

நெடுமாறன்,வீரமணி,வைகோ,திருமாவளவன்,
தியாகு,ராமதாஸ், சீமான் கும்பலே,

ஈழத்தமிழர் பேராலும், விடுதலைப்புலிகள் பேராலும் ஓட்டுப்பொறுக்க,

தமிழக இளைஞர்களையும், இளம் யுவதிகளையும், தூண்டிவிட்டு தீக்கிரையாக்கும் நரபலிவேட்டையை உடனே நிறுத்து!

உழைக்கும் தமிழக மக்களே, தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களே,
ஓட்டுப்பொறுக்கி இனமானத்தமிழ் சமரசவாதிகளை ஓரந்தள்ளி,
புரட்சிப்பாதையில் ஓரணி திரளுங்கள்!

===============  புதிய ஈழப்புரட்சியாளர்கள் ================


சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் நேற்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,

`` இந்த இலக்கிய அமைப்புகள் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பலருக்கு புரிவதில்லை. தமிழர்களுக்கு உள்ள வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயரிய பண்புகளை எடுத்துக்காட்டவும், அந்த குணங்களை நம் சமுகம் கடைபிடிக்கவும் எடுத்துச் சொல்வதுதான் இந்த விழாவின் நோக்கம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய முன்னோடி நாடுகளில் வாழ்ந்த மக்கள் எல்லாம், ஆடைகள் அணியாமல் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், நம்முடைய சோழ நாட்டில் மக்கள் பகலில் அணிவதற்கு பட்டாடையும், இரவில் அணிவதற்கு பருத்தி ஆடையும் பயன்படுத்தினார்கள் என்று நமக்கு சொல்லுகிறது சிலப்பதிகாரம்.

உலகத்துக்கே ஆடையணியும் நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நம் தமிழ் பெண்கள், இன்றும் உலகத்துக்கே ஆடைகள் கொடுப்பது தமிழகம் தான், ஆனால், சேனல்-4 தொலைக்காட்சியில் இசைப்பிரியா என்ற அந்த தமிழ்ச் சகோதரியை ஆடைகளை அவிழ்த்து காட்டும் கட்சிகளை காட்டும் போது நம் ரத்தம் கொதிக்கிறது.

சிலப்பதிகாரத்தில், குற்றமில்லாத தன் கணவனை குற்றவாளி என்று நினைத்து அந்த பாண்டியமன்னன் நெடுஞ்செழியன் குற்றமிழைத்த காரணத்தால் அவன் நாடு நகரமெல்லாம் எரித்தாள் கண்ணகி. ஆனால், இன்று தன் சகோதரன்..., உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன்.... “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி.

அந்த பத்தினி பெண்ணான கண்ணகியின் சாபத்திலும் நீதியிருந்தது... இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது.... நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்குத் தண்டனை கூடாது என்றார். பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமூலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல் அம்பேத்கார் அவர்களும் தூக்குத் தண்டனை கூடாது என்றார்கள்.

இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.

அன்று திருப்பெரும்புத்தூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை..... முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே.

பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவுசெய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது... நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது`` என்று பேசினார்.

29 Aug 2011 மனிதன் இணையம்

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...