Tuesday, 16 August 2011

மார்க்சிய அறிவகம்

ENB இணைய குழுமத்தில் `மார்க்சிய அறிவகம்` என்கிற புதிய இணையம் இன்றுடன் இணைந்துகொள்கின்றது.

பாட்டாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் முதன்மையாக, அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களதும்,தேசங்களதும் விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவம் மார்க்சியம் ஆகும்.

சமுதாய வளர்ச்சிப்போக்கை சார்ந்து மார்க்சியமும் `மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனையாக` வளர்ந்து வலிமை பெற்று இருக்கின்றது.

நாம் ஏகாதிபத்தியத்தினதும், அதை எதிர்த்த சோசலிஸ, புதிய ஜனநாயக, தேசிய விடுதலைப் புரட்சிகளினதும் சகாப்த்தத்தில் வாழ்கின்றோம்.

21ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலங்களே இப்புரட்சிகரக் கொந்தழிப்பு -களுக்கும், தனது உள் முரண்பாடுகளுக்கும் ஏகாதிபத்தியமும், பிற்போக்கு எதேச்சாதிகாரமும் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடித் தடம் புரள்வதை எடுத்துக்  காட்டிவிட்டன!

புறவயநிலைமைகள் புரட்சிகரக் கொந்தழிப்பின் அடையாளமாக இருக்கையில், அகவயமாக புரட்சிகர உழைக்கும் மக்களின் தேசியக் கிளர்ச்சிகள் தன்னியல்பானவையாகவே உள்ளன.

தவிர்க்கவியலாத இத்தன்னியல்பான இயக்கங்களைக் கணக்கில் கொண்டு மார்க்சிய லெனினிய திட்டத்தில் அமைந்த எதிர்ப்பை ஒழுங்கமைப்பது  சர்வதேசிய பாட்டாளிவர்க்கத்தின் இன்றைய உடனடிக் கடமையாகின்றது.

இத்தகைய ஒரு சர்வதேசிய இயக்கத்தைக் கட்டியமைக்க மார்க்சிய லெனினிய மா ஒ சிந்தனையை கற்றறிந்து, பிரயோகிக்க தேர்ச்சி பெறுவது முதன்மையான அவசர அவசியக் கடமையாகும்.

’மார்க்சிய அறிவகம்’ நம் தேசியப் பரப்பில் இப்பெருங்கடமைக்கு உதவும் சிறு பணியாகும்.

மார்க்சிய மூலவர்களின் படைப்புக்களை தமிழ்ப் பதிப்பில் தம் வசம் கொண்டிருப்போர் தயவுசெய்து தந்துதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி: மார்க்சிய அறிவக ஆக்கக் குழு.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...