Sunday, 20 February 2011

பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியை நேரில் சென்று மிரட்டிய இந்திய தூதரக அதிகாரி!

பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியை நேரில் சென்று மிரட்டிய இந்திய தூதரக அதிகாரி!


சிறீலங்கா அரச படைகளினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலக அதிகாரி நேரில் சென்று மிரட்டியதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 112 மீனவர்களுக்கும் எதிர்வரும் 28 ஆம் நாள் வரை தடுப்புக்காவல் உத்தரவை பருத்தித்துறை பகுதி நீதிமன்றம் விதித்திருந்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பினால் இந்திய மத்திய அரசு அவசர நடவடிக்கையை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் மிரட்டிய அதே சமயம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி மகாலிங்கம் என்பவர் கடந்த வியாழக்கிழமை (17) பருத்தித்துறை பகுதி நீதிமன்ற நீதிபதி சிறீநிதி நந்தசேகரனின் இல்லத்திற்கு சென்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

எனினும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்தியாவின் அழுத்தம் அதிகாரிக்க கொழும்பு மாவட்ட பிரதம நீதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்துள்ளார் என அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே, சிறீலங்கா கடற்படையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்படையின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே வந்து பொறுப்பேற்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Feb 19, 2011 / பகுதி: செய்தி பதிவு

No comments:

Post a Comment