SHARE

Sunday, February 20, 2011

தாய் நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்!

பெற்றதாய் சுமந்தது பத்துமாதம்
நிலம் சுமப்பதோ நீண்டகாலம்.
அன்னை மடியிலிருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில் தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவானதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்துபோனால் பலமிழந்துபோகும்
பலமிழந்துபோனால் இனம் அழிந்துபோகும் 
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்.

புலவன்:புதுவை இரத்தினதுரை

பூவரசம் வேலியும் புலினிக் குஞ்சுகளும் பக்கம் 88

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...