Saturday, 30 October 2010

தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண புழுக்கள் போல் குழுக்கள்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேர் கொண்ட குழு
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில்ஆராய்வதற்கு 10 பேர் கொண்ட குழு அதன் அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை என்கிறார் அமைச்சர் டியு குணசேகர
கொழும்பு, ஒக்ரோபர் 29
விடுதலைப்புலிகள் மற்றும் புலிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பரிசீலனை செய்து சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கவென குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மூத்த அரச சட்டத்தரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளோ, குற்றச்சாட்டுக்களோ இன்றி நீண்ட நாள்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இதன் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் என புனர்வாழ்வளிப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர "உதயனு'க்குத் தெரிவித்தார். நேற்று "உதயன்' செய்தியா ளர் அமைச்சரைச் சந்தித்து உரை யாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
"அரச படைகளுடன் நேரடியாகச் சண்டையிட்டு சரணடைந்த முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு மற்றும் பயிற்சிகளை வழங்கி விடுதலை செய்கின்றீர்கள். அதேவேளை, புலிகளுக்குப் புகலிடம் அளித்தனர். உணவு கொடுத்தனர். ஆதரவளித்தனர் எனச் சந்தேகத்தின் பேரில் நீண்ட காலமாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே; இது ஏன்?'' என்று "உத யன்"செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
"இவ்விடயத்தில் உள்ள உண்மைத் தன்மையையும், சட்டச்சிக்கல்களையும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.சரண் அடைந்தவர்கள் சந்தேகப் பேர்வழிகள் அல்லர். நேரடியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தனர். இதனால் எம்மால் மன்னிப்பு வழங்கப்பட்டது. சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகை வழங்கப்படவில்லை. விசாரணைகளும் நடத்தப்படவில்லை. இதில் பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. எனவே சட்டமா அதிபருடன் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளேன். இதன் காரணமாக சிரேஷ்ட அரச சட்டத்தரணிகள் பத்துப்பேரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்களின் விவகாரம் தொடர்பாக தனித்தனியாகப் பரிசீலனை செய்து வருகின்றனர். குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகத்தின் பேரில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு முடிவு காணப்படும்.குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பின் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும். ஏனையோர் விடுதலை செய்யப்படுவர். வழக்கு விசாரணைகளும் துரிதப்படுத்தப்படும்'' என
அமைச்சர் டியு குணசேகர கூறினார்.தற்போது புதியமகசின் சிறைச்சாலையில் 115 பேர், வெலிக்கடையில் 18 ஆண்கள், 55 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட கொழும்பு விளக்கமறியலில் 340பேர், நீர்கொழும்பில் 26,
அநுராதபுரத்தில் 45, வவுனியாவில் 27, யாழ்ப்பாணத்தில் 30, திருகோணமலையில் 40, மட்டக்களப்பில் 35, கண்டியில் 16, பதுளையில் என மொத்தம் 763, தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.
செய்தி: யாழ் உதயன்

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...