அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டது மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது, களனியில் பெற்றோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டது ஆகியன தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது, களனியில் பெற்றோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டது ஆகியன தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி: களனியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடைபெற்றபோது பொலிஸார் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செயற்படுவது முறையா?பதில்: இது குறித்த அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கவில்லை.
கேள்வி: பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது குறித்து அறிக்கை கிடைத்ததா?
பதில்: இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் சாட்சிமளிக்க வேண்டும். அப்படி இல்லாமல் அறிக்கையை எதிர்பார்க்க முடியுமா?
கேள்வி : நல்லிணக்க ஆணைக்குழு முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் சாட்சியமளிக்கும்போது 900 பொலிஸார் கொல்லப்பட்டதற்கு கருணாவே காரணம் எனத் தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: இறுதி அறிக்கை கிடைத்ததும் இது குறித்து ஆராயப்படும். அப்போது நீங்கள் இருப்பீர்களா என்பது சந்தேகமாகவுள்ளது
கேள்வி: ஏன் என்னைக் கடத்திக் காணாமலாக்கப் போகின்றீர்களா?
பதில் : நீங்கள் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை
தகவல் : நன்றி யாழ் உதயன்
No comments:
Post a Comment