SHARE

Friday, September 03, 2010

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? 6 ஆம் திகதி தீர்மானம் ‐ மாவை சேனாதிராஜா

உத்தேச அரசியலமைப்புத் திருத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் 6 ஆம் திகதி கூடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்ததில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தீர்மானம் ஒன்றை இன்னும் மேற்கொள்ளாததால், அது குறித்து மேலதிகமான எதனையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...