SHARE

Monday, August 23, 2010

கே.பி க்கு நல்ல கவனிப்பு

வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மகிந்த என்னை அன்பாக பராமரிக்கிறார்: குமரன் பத்மநாதன்
ஆகஸ்ட் 23, 2010 சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தன்னை நன்கு கவனிப்பதாகவும், தனக்கு பிரிகேடியர் பதவியை வழங்கியுள்ளதாகவும் பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக த லங்காநியூஸ்வெப் என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தன்னை மிகவும் நன்றாக பராமரித்து வருவதாகவும், தனக்கு பிரிகேடியர் பதவி தந்துள்ளதாகவும் குமரன் பத்தமாநாதன் பிரித்தானியாவில் உள்ள தமிழர் ஒருவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊர்காவல்படை விரைவில் அமைக்கப்படவுள்தாகவும், அதன் தலைவராக தன்னை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவம் தெரிவித்த அவர், கேணல் தீபன், கேணல் சொர்ணம், கேணல் பானு, கேணல் பால்ராஜ் என வேலுப்பிள்ளை பிரபாகரன் களமுனை தளபதிகளுக்கு பதவியை வழங்கினாரே தவிர தனக்கு பதவி எதனையும் வழங்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மகிந்தா ஆட்சியில் உள்ளவரை தனது பாதுகாப்புக்கள் உறுதியானது என்பதால் புலம்பெயர் தமிழ் மக்கள் மகிந்தா தலைமையிலான அரசுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என கே.பி தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: சங்கதீ இணையம்
பிற்குறிப்பு: இந்தக் கவனிப்பு எதற்காக வழங்கப்படுகின்றது என கே.பி இன் சகபாடி உருத்திராவிடம் கேட்டால் '' அவர் கைதியாக இருப்பதால் " எனச் சொல்வாரோ!!

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...