ரரஜபக்ச செவிடனின் காதில் சங்கூதிய, செவியில்லா சர்வதேச சமூகத்துக்கு. சங்கூதும் மேட்டுக்குடி தமிழ் வர்க்கத்தின் ஆரவாரம் அரசியல் போராட்டம் அல்ல அமைதிக் கலை விழாவே!
News:
பிரித்தானியாவில் இருந்து ஜெனீவா வரை!
கருப்பு ஜூலையை முன்னிட்டு, தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா நடாத்திய தமிழின அழிப்பைக் கண்டித்தும், இதற்கு உடனடியாக போர்க் குற்ற விசாரணையை நடத்தி இன அழிப்பில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தவும்,
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் நாளை 23ஆம் திகதி இரவு 9:00 மணிக்கு வெஸ்மினிஸ்டரில் உள்ள டோத்ஹில் வீதியில் (Tothill Street) தொடங்கி வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி 11:30 மணிவரை நடைபெற உள்ள இரவு நேரப் போராட்டத்தைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் அவர்கள் தனது ஐ.நாவை நோக்கிய நடை பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.
மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் ஜி.சிவந்தன், டோவர் கடற்கரையைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.
இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் இவரது மனு கையளிக்கப்பட இருக்கின்றது.
சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன. அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.
சிவந்தனின் http://www.sivanthanwalk.blogspot.com/ நடைப்பயணத்தின்போது, அந்த அந்த நாடுகளில் வாழும் எம் தமிழ் உறவுகள். தங்களது அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த போராட்டத்தில் மட்டுமல்லாது எதிவரும் அனைத்துப் போராட்டங்களிலும் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி எம் தேசத்தை விரைவில் மீட்டெடுப்போம்.
எமக்கும் வேலைப் பகிர்வினைத் தந்தமையிட்டு மகிழ்வடையும் அதே நேரம், தமிழீழ புரட்சிகர மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்கள் பயணம் தமிழர்க்கு மேலும் பலம் சேர்க்கும் என்னும் நம்பிக்கையுடன் கரம் கோர்க்கின்றோம்.
நாங்கள்தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
No comments:
Post a Comment