சிறீலங்கா அரசின் 'மேற்குலக எதிர்ப்பு' வெறும் பேரம் பேசும் நாடகமே!
மே 18 2009 இற்குப் பின்னால் முழு நாட்டையும், (உள் நாட்டு விதேசிகள் உள்ளிட்ட) அந்நியர் சூறையாடுவதை மூடிமறைக்கவே 'மேற்குலக எதிர்ப்பு' நாடகம் இலங்கையில் அரங்கேற்றப்படுகின்றது.கதாநாயகச் சிறீலங்கா அடிப்பது போல் நடிக்கிறது! வில்லனான மேற்குலகம் அடிவாங்குவது போல் நடிக்கின்றது. ஆனால் அந்நிய மூலதனம் சுதந்திரமாய் திரிகிறது! அந்நியச் சுரண்டல் அனைத்து இலங்கை மக்களதும் இரத்தம் குடிக்கின்றது!
42 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிவாய்ந்த இலங்கைப் பொருளாதாரத்தில், அந்நிய நேரடி முதலீடு 2008ம் ஆண்டில் 889 மில்லியன் டொலர் எல்லையை எட்டியது.உலகச்சரிவு காரணமாக இது 2009 இல் 602 மில்லியன் டொலர்களாகத் தாழ்ந்தபோதும், நொவெம்பர் மாதம் அறிவிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்ட அறிக்கையைத் தொடர்ந்து இது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென அந்நிய முதலீட்டு அதிகாரசபை நம்புகின்றது.இவ்வரவுசெலவுத் திட்டம் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகளை வெளியிடுவதோடு, பல புதிய வரிச் சலுகைகளையும் இம் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் என நம்பப்படுகின்றது.2011ஆம் ஆண்டுக்காக வரும் நொவெம்பர் மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தின் புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் விவசாயம்,கடற்தொழில்,உழைப்புச்சக்தி விற்பனை (business outsourcing),கல்வி, கடல் வழி வாணிபம், விமானப்போக்குவரத்து, கட்டுமானத்துறை, உல்லாசப்பயணம் என அனைத்து பொருளாதாரத் துறைகளையும் அந்நியச் சுரண்டலுக்கு தாரைவார்ப்பதாக அமையவுள்ளது.மேலும் தமிழீழ தேசிய விடுதலை யுத்தம் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தைச் சூதாட்டம் 152% பாய்ச்சல் வளர்ச்சி கண்டுள்ளது.இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்கான உந்துதலாக அமைந்துள்ளதென அந்நிய முதலீட்டு அதிகாரசபையின் அதிகாரி ரொயேட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த அந்நிய மூலதனத்தின் அபரிமிதமான பாய்ச்சல் பக்ச பாசிஸ்டுக்கள் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதற்காக இருக்குமோ?!
மாறாக 'மே 18 இற்குப் பிந்திய உள்நாட்டுச் சூழ்நிலையின் சாராம்சமான, தமிழ்த் தேசிய அழிப்புப் போக்கானது, சர்வதேச சூழ்நிலையை அநுசரித்து, ஆதரித்துச் செல்கிறது, என்பது குறிப்பான முக்கியத்துவம் உடையதாகும்.' என்ற முள்ளிவாய்க்கால் வீரகாவிய ஆய்வுரையை இப்பொருளாதாரப் போக்கு உறுதிசெய்கின்றது.(செய்தி ஆய்வு: ENB)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
INTERVIEW - Sri Lanka to miss 2010 FDI goal, set up new policy
Thu, Jul 22 2010By Shihar Aneez
COLOMBO (Reuters) - Sri Lanka, likely to miss its 2010 target for Foreign Direct Investment (FDI), will introduce new policies in the 2011 budget to spur post-war investment and tax revenues, a senior investment official said on Thursday.
The $42 billion economy had aimed to attract a record $1 billion FDI mainly in tourism and outsourcing after a 25-year war ended in May last year.
Jayampathy Bandaranayeka, the chairman and director general of the country's state-run Board of Investment (BOI) said the aim was ambitious.
"We are unlikely to move beyond $1 billion and investments would be more in line with what was achieved last year," Bandaranayeka said in an interview.
"The real take off will be following the budget in November. We expect 2011 to be much higher than $1 billion," he said.
Foreign direct investment hit a record $889 million in 2008, but fell in 2009 to $602 million due to the global downturn.
The end of the war, since when the stock market had surged over 152 percent, boosted Sri Lanka's growth prospects.
The new FDI policies, expected in 2011 budget, will aim to draw investments into agriculture, fisheries, business outsourcing, education, shipping, aviation, infrastructure and tourism, Bandaranayeka said.
The new policies also will rationalise tax concessions, which were given to attract foreigners due to the prolonged war.
"The government will be looking forward to a different regime of incentives that take into account the special needs of the country. The expectation is both to attract FDIs to increase investments and also to ensure the future tax base of the country is protected," he said.
Future FDI projects would be available for investors across the world in all the selected sectors and the BOI hopes to minimise all bureaucracy for foreigners.
(Editing by Ron Askew)
==================
இன்றைய சர்வதேசிய அரசியல் நிலைமை
1) ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி காரணமாகவும், மூன்றாவது உலகப் பொதுப் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், இதனால் உருவான முரண்பாடுகளும் யுத்தங்களும், 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-மிகத் தெளிவாக- நான்கு புதிய ஆளும் வர்க்க சக்திகளை, ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பின் தலைவனாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக உருவாக்கியுள்ளன.அவையாவன: ஐரொப்பிய யூனியன், ரசியா, ஈரான், சீனா (Europian Union, Russia, Iran.,China, -ERIC) ஆகும்.வருங்காலத்தில் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஒன்று இவ்வணியில் இணையக்கூடும்.ஐரோப்பியன் யூனியன் இதர மூன்று நாடுகளுடனும் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களைக்காட்டிலும் அமெரிக்காவுடன் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களை அதிகம் கொண்டிருப்பது உண்மை.
2) இதனால் இது எந்தவகையிலும் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அடிப்படையான-தலைகீழான-மாறுதலை இன்னமும் கொணர்ந்துவிட வில்லையெனினும், ஒரு புதிய அணிசேர்க்கைக்கான ஆதாரக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன.அதை நோக்கி உலகம் நகரத்தொடங்கிவிட்டது. அணிசேர்க்கை துல்லியமாக எவ்வாறு அமையும் என்பதை இப்போது அநுமானிப்பது கடினமானதாகும்.
3) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால்- குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பின்னால்- உதயமான இத்தகைய ஒரு புதிய உலக சூழல் வரலாற்று வழியில் ஒரு திருப்பமாகும்.முந்தைய சூழலில் இருந்து வேறான ஒரு புதிய சூழலாகும்.
4) இச்சூழலை நகர்த்திச் செல்லும் ஆதிக்க சக்திகள் அடிப்படையில் செய்வது உலக மறு பங்கீடாகும்.இதனால் சுதந்திர தேசிய இயக்கங்களை நசுக்குவதை இவை தமது பொதுக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
5) இதற்கு யுத்தத்தையும், பாசிசத்தையுமே தமது ஆயுதமாக ஏந்தியுள்ளன.
6) இச் சூழல் அரைக்காலனிய ஆளும் கும்பல்களின் பேர "சுதந்திரத்தை'' அகலப்படுத்தியுள்ளது.
7) உள் நாடுகளில் ஜனநாயக, தேசிய சுதந்திர இயக்கங்களை நசுக்கும் பாசிச அரசுமுறையைப் பாதுகாத்துப் பலப்படுத்துகிறது. போசித்து வளர்க்கிறது.போற்றித் துதிக்கின்றது.
8) இப்பின்னணியில் தான் இலங்கையின் அரசியல், அதன் பல் முகங்களிலும் நகர்கிறது.இனிவருங் காலங்களில் இலங்கையின் அரசியல் திசைவழி இவ்வாறுதான் அமையப் போகின்றது.எனவே மே 18 இற்குப் பிந்திய உள்நாட்டுச் சூழ்நிலையின் சாராம்சமான, தமிழ்த் தேசிய அழிப்புப் போக்கானது, சர்வதேச சூழ்நிலையை அநுசரித்து, ஆதரித்துச் செல்கிறது, என்பது குறிப்பான முக்கியத்துவம் உடையதாகும்.
ஆதாரம்: 'முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18'
http://senthanal.blogspot.com/2010/05/18.html
SHARE
Subscribe to:
Post Comments (Atom)
“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal
Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...
No comments:
Post a Comment