Saturday 17 July 2010

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

அன்பார்ந்த தமிழீழமக்களே, புலம் பெயர் தமிழர்களே, மாணவர்களே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே;
கடந்த ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோவையில் செம்மொழி மாநாடு ஒன்றினை நடத்தினார்.பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்க முயன்றார்.இறுதி யுத்தத்தில் இந்திய விஸ்தரிப்புவாதத்தை ஆதரித்து நின்று ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை மூடி மறைக்கலாம் என கனவு கண்டார்.தமிழீழத்தில் இருந்து சிவத்தம்பி போன்ற பரம்பரை ஆண்டிகளை மேடையில் அமர்த்தி அவர்களின் புகழாரம் மூலம் தமிழக மக்களை ஏமாற்றத்திட்டமிட்டார்.ஆனால் அவரது திட்டம் படுதோல்வியில் முடிந்தது.
அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலை, செம்மொழி மாநாட்டு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தோலுரித்துக்காட்டினர் தமிழகத்தின் புரட்சிகர சக்திகள்.தனது சந்தர்ப்பவாத அரசியல் தமிழக மக்களிடையே அம்பலமாவதால் தான் தமிழக மக்களிடையே இருந்து தனிமைப்படுவதைக் கண்டு அஞ்சி செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசு பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது.இதைக் கண்டிப்பதும், நிறுத்தக் கோருவதும், புரட்சிகர இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதும் நமது ஜனநாயகக் கடமையாகும்.
* இந்திய விஸ்தரிப்புவாதத்தின் தமிழகக் காவலன் கருணாநிதியே,
* அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் உனது சந்தர்ப்பவாத அரசியலை, செம்மொழி மாநாட்டு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தோலுரித்துக்காட்டிய தோழர்கள் மீது தொடுக்கும் பாசிசத் தாக்குதலை உடனே நிறுத்து!
* கைதி செய்த போராளிகளை உடனே விடுதலை செய்!
* புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் தொடுக்காதே!
* விமர்சனச் சுதந்திரத்தை நசுக்காதே!
* தமிழகத்தின் தமிழீழ ஆதரவு இயங்கங்களை ஒடுக்காதே!
* தமிழை வைத்து நடத்திய பிழைப்பு போதும், தமிழும் தமிழகமும் தமிழரும் வாழ வழி விட்டு ஒதுங்கு!
* தமிழீழமக்களே, புலம் பெயர் தமிழர்களே; இந்திய விஸ்தரிப்புவாதத்தை உறுதியாக எதிர்க்கும் தமிழகத்தின் புரட்சிகர சக்திகளோடு ஒன்றுபடுங்கள்
======== புதிய ஈழப்புரட்சியாளர்கள்.==========

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...