SHARE

Tuesday, March 02, 2010

கிளிநொச்சியில் இந்திய ஆதரவில் ஈ.என்.டி.எல்.எஃப் முகாம்


கிளிநொச்சியில் இந்திய ஆதரவில் ஈ.என்.டி.எல்.எஃப் முகாம்
திகதி: 02.03.2010 // தமிழீழம் சங்கதி
கிளிநொச்சியில் இந்திய சிறீலங்கா கூட்டு ஆதரவில் செயற்படும் E.N.D.L.F ஒட்டுக் குழுவினர் முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சியில் ஜெயந்தி நகர் பகுதியில் முன்னர் சர்வதேச ஆங்கில பாடசாலையாக இயங்கிய கட்டடத்தினையே இவ்வாறு முகாம் அமைப்பதற்காக சிறீலங்கா இராணுவத்தினரும், சில ஒட்டுக்குழு அங்கத்தவர்களும் துப்புரவாக்கி வருகின்றனர்.
இந்த காணியும் கட்டடமும் குருகுலம் சிறுவர் இல்லம் மற்றும் குருகுலம் ஆச்சிரமம் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற மக்களிடம் சிறீலங்கா இராணுவத்தினரும், ஒட்டுக்குழுக்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இவர்கள் மீண்டும் படுகொலைகள், கற்பழிப்புகள், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் மீளக்குடியமர்ந்த மக்கள் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...