SHARE

Tuesday, March 02, 2010

2009 பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மதிப்பிட்டதை விடவும் 37 வீதம் அதிகம்

2009 பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மதிப்பிட்டதை விடவும் 37 வீதம் அதிகம் விவரத்தை அரசு நேற்று வெளியிட்டது
கொழும்பு, மார்ச் 03 யாழ் உதயன் 2010-03-03 06:06:29
கடந்த ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 34 ஆயிரத்து 280 கோடி ரூபாவாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அது 37 வீதம் எகிறி 46 ஆயிரத்து 960 கோடி ரூபாவாக எட்டியது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 34 ஆயிரத்து 280 கோடி ரூபாவாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அது 37 வீதம் எகிறி 46 ஆயிரத்து 960 கோடி ரூபாவாக எட்டியது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டுக்கான வரவு செலவுப் புள்ளி விவரங்களை அரசு நேற்று வெளியிட்டது.
2009 இல் வரவுக்கு மிஞ்சிய செலவாக 34 ஆயிரத்து 280 கோடி ரூபா இருக்கும் என உத்தேசிக்கப்பட்டது. இது மொத்த உள் நாட்டு உற்பத்தியின் ஏழு வீதமாகும்.
ஆனால் அறவீடுகள் எதிர்பார்த்ததை விடக் குறைந்ததாலும், நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளாலும் நாட்டின் வரவு செலவு வேறுபாட்டில் துண்டு விழும் தொகை சுமார் 37 வீதம் அதிகரித்து 46 ஆயிரத்து 960 கோடியை எட்டியது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.7வீதத்தைத் தொட்டு நிற்கின்றது.
வரிகள் மூலம் கடந்த ஆண்டு 72 ஆயிரத்து 570 கோடி ரூபா அறவிடப்பட முடியும் என உத்தேசிக்கப்பட்டது. ஆனால் 3.2 வீதம் குறைவாக 70 ஆயிரத்து 210 கோடி ரூபாவே அறவிடப்பட முடிந்தது.
நாட்டின் மொத்தச் செலவினம் கடந்த ஆண்டில் 109 ஆயிரத்து 100 கோடி ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் அது 9.7 வீதம் எகிறி 119 ஆயிரத்து 700 கோடி ரூபாவைத் தொட்டது.
மீண்டுவரும் செலவினம் 6.6 வீதம் உயர்ந்தது.
பொதுச்சேவை சம்பளம் மற்றும் செலவினம் எதிர்பார்க்கப்பட்டமையை விட 2.6 வீதம் உயர்ந்தது.
மானியங்களும், மாற்றீடுகளும் 3.7வீதமும், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான செலவினங்கள் 2.2 வீதமும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகரித்தன.
இதேசமயம் நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாட்டுக்கு மிக சாதகமான பல அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் திறைசேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...