SHARE

Friday, January 08, 2010

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திருமலை, மட்டு., அ'புர சிறைகளுக்கும் பரவியது

நியூ மகஸின் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திருமலை, மட்டு., அ'புர சிறைகளுக்கும் பரவியது
யாழ் உதயன் 2010-01-08 07:33:55
உடல் நிலை பாதிக்கப்பட்ட மூவர் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதி

கொழும்பு மகஸின் சிறைச்சலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அல்லது தங்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த 5ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்போது திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம் சிறைச்சாலை களுக்கும் பரவியது. கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நான்காவது நாளாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மூன்றாவது நாளாகவும், அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்றிலிருந்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"அண்மையில் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை அரசு விடுதலை செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், நாம் சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது விடுதலை தொடர்பாக அரசு பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. எனினும் அது ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை.
"தற்போது நாங்கள் மீண்டும் ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்கு நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட எங்களுக்குத் தீர்க்கமான உறுதிமொழி ஒன்றை வழங்கவேண்டும். அந்தப் பட்சத்திலேயே நாம் எமது உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம். இல்லையென்றால் எமது போராட்டம் சாகும்வரை தொடரும் என்று கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...