Sunday 17 January 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா கட்டளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா பல்வேறுபட்ட உத்தரவுகள்
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய அதிகாரிகளுடன் பேச்சவார்தைகளை நடத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் குறித்து இந்திய அரசாங்க தரப்பிற்கு தெளிவு படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே தாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக சரத் பொன்சேகாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூட்டமைப்பினர் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாளைய தினம் நாடு திரும்பும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை நடவடிக்கைகளை முழு வீச்சுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியாவிற்கோ தமிழக அரசிற்கோ நெருக்கடி ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை கூட்டமைப்பு வெளியிடக் கூடாது என்ற கண்டிப்பான
உத்தரவு இந்திய தரப்பால் வழங்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளமை குறித்தோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை இந்தியா பெற்று தர தவறியுள்ளதாகவோ கூட்டமைப்பினர்
பரப்புரைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து தாங்கள் முன்வைக்கும் தீர்விற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இந்தியா
வலியுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...