Thursday, 7 January 2010

பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி இணையச் செய்திகள்
வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை
உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமக்கு கருத்து தெரிவிக்கையில்,

"விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மளிடமோ,டென்மார்க்கிலுள்ள அவரது மனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.

இந்நிலையில் கடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று , நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் மற்றும் அவரது மனைவியை அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகளை நடத்துவேன்.

அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கு ம் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன்.இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment