மாவோயிஸ்ட்டுகள் திடீர்த் தாக்குதல்; மராட்டியத்தில் 18 பொலிஸார் பலி!
யாழ் உதயன் 2009-10-10 06:28:09
மராட்டிய மாநிலத்தில் நேற்றுமுன்தினம் 200 மாவோ நக்ஸலைட்டுகள் திரண்டு வந்து பொலிஸார் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே 4 மணிநேரம் நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில் 18 பொலிஸார் பலியாகினர்.மராட்டிய மாநிலம் காத்சிரோலி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நக்ஸலைட் ஒழிப்புப் படையைச் சேர்ந்த கொமாண்டோக்களும், சாதாரண பொலிஸாருமாக 46 பேர், நேற்றுமுன்தினம் காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அந்தமாவட்டத்தின் லகிர் கிராமத்துக்கு அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த 200 மாவோயிஸ்ட்டுகள் கொண்ட கும்பல், பொலிஸார் மீது திடீரெனத்
துப்பாக்கிச் சூடு நடத்தியது. பொலிஸார் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.கூடுதல் படைகளும் வரவழைக்கப்பட்டன.
அப்படையினர் மீதும் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே 4 மணி நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 18 பொலிஸார் பலியாகினர்.
இவர்கள் இவர்கள் அனைவரும் நக்ஸலைட் ஒழிப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எல்லைப் பாதுகாப்புப் படையினர் 50 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் துணிச்சலாக மோதினர்.
இதையடுத்து மாவோயிஸ்டுகள், அடர்ந்த காடுகளுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் மீதியுள்ள 28 பொலிஸாரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எல்லைப் பாதுகாப்புப் படையினர் 50 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் துணிச்சலாக மோதினர்.
மராட்டிய மாநில சட்டசபை தேர்தல், வரும் 13ஆம் திகதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், நக்ஸலைட் பிரச்சினை பற்றியும், அதை ஒடுக்குவதற்கான வழி முறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment