ஆந்திர முதல்வர் ரெட்டி நக்சலைட் பிரதேசத்தில் அகப்பட்டிருக்கலாம் என அச்சம்
ஆந்திர முதல்வர் ரெட்டி பயணம் செய்த ஹெலி மாயம்! தேடும் பணியில் 5,000 பொலிஸார், விமானப் படையினர்!! நக்சலைட் பிரதேசத்தில் அகப்பட்டிருக்கலாம் என அச்சம்
2009-09-03 05:05:23 Yaal Uthayan
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியை ஏற்றிச்சென்ற ஹெலி கொப்டர் காணாமற்போயுள்ளது. அது இந் திய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியை ஏற்றிச்சென்ற ஹெலி கொப்டர் காணாமற்போயுள்ளது. அது இந் திய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:ஆந்திரப் பிரதேசத்தில் மழை பெய்து வருவதால் வானம் தொடர்ந்தும் மேகமூட்டத்துடனேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.பொதுமக்களுடன் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு சித்தூர் மாவட்டத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் மலைப்பாங்கான பிரதேசத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த போதே முதலமைச்சர் காணாமற் போயுள்ளார். நேற்றுக் காலை 8.25 மணிக்கு சென்ற அவரது ஹெலிகொப்டர் 9.35 மணிவரை ராடர் கட்டுப்பாட்டு அறை யுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதன்பின்னரே தொடர்பை இழந்ததாகவும் சொல்லப்பட்டது.அங்கு தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதனால் ஹெலிகொப்டர் மூலமான தேடும் பணி களும் தாமதமடைந்தன. முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகொப் டர் நக்சலைட்களின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டினுள் தரையிறங்கியிருக்க லாம் என சந்தேகிக்கப்படுகின்றது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி காணா மற்போனதை அடுத்து அவரைத் தேடும் பணியில் இந்திய இராணுவத்தினரின் ஹெலி கொப்டர்களும் விசேட பொலிஸாரும் "இஸ்ரோ" வின் சிறப்பு விமானம் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வெளியா கும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை போதிய வெளிச்சம் இன் மையால் ஹெலிகொப்டர்கள் மூலம் அவ ரைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள் ளது என்றும் அவர் காணாமற்போன இடம் எனக்கருதப்படும் இடத்தினைச் சுற்றி வனத்துறை அதிகாரிகளுடன் சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களில் இருந்து இணைந்த 5,000 விசேட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆந்திர முதலமைச்சர் ராஜசேகரரெட்டி தொடர்பான தகவல்கள் கிடைக்காமையினால் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்கட்சித் தலைவர் சேனியாகாந்தி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.
Thursday 3 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!
அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...
No comments:
Post a Comment