SHARE

Friday, November 21, 2014

மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திப்போம் - கூட்டமைப்பு

மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திப்போம் - 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 11:19.46 PM GMT ]

மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று அல்லது நாளை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபாலவை கூட்டமைப்பு சந்திக்கும்.

சந்திப்பின் பின்னர் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சிகளின் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.


இதுவரையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது, அல்லது என்ன தீர்மானம் எடுப்பது என்பது குறித்த முடிவுகளை எடுக்கவில்லை.
எவ்வாறெனினும், மைத்திரிபாலவுடனான சந்திப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானமொன்றை 48 மணித்தியாலங்களில் எடுக்கும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

India-Assembly Elections 2026

  Assembly Elections 2026: BJP leads West Bengal, TVK storms Tamil Nadu, UDF returns in Kerala Counting trends from five States point to the...