SHARE

Monday, March 10, 2014

இந்தியாவுக்குள்ள நிர்ப்பந்தத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும்; ஜனாதிபதி

இந்தியாவுக்குள்ள நிர்ப்பந்தத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும்; 
புதுடில்லியுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளோம்; ஜனாதிபதி

2014-03-02 05:56:35 | General

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின்
கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால்
கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டை
எடுப்பதென்பதில் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய தேர்தல் நிர்ப்பந்தங்களை தான் புரிந்துகொள்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். 3 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் உட்பட பலவிடயங்கள் குறித்தும் பேசினார்.

மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எவ்வாறு வாக்களிக்கும் என்பது
தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். “எனக்குத் தெரியாது. மார்ச் மாதக்
கூட்டத் தொடர் முடிவடைந்து ஒரு மாத காலத்தில் இந்தியா தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளது. தமது எதிர்காலத்தையிட்டு சிந்திக்க
வேண்டியவர்களாகவும், வாக்காளர்களின் மனநிலையையிட்டு சிந்திக்க
வேண்டியவர்களாகவுமே அவர்கள் இருப்பார்கள். அவர்களை நாம்
புரிந்துகொள்கிறோம். அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள
வேண்டும்’ என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் இந்தியா உட்பட மனித உரிமைகள் பேரவையில் உள்ள
அனைத்து நாடுகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும் என குறிப்பிட்ட மகிந்த
ராஜபக்ஷ, “இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை மியன்மாரில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நான் சந்திக்க உள்ளேன். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியவெளி விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் 5 நாட்களுக்கு முன்னர் பேசியுள்ளார். நாம் தொடர்ச்சியாக தொடர்பு கொண்ட நிலைமையிலேயே உள்ளோம்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் அது மென்மையானதாக
இருந்தாலும் கூட, எமக்கு சங்கடத்தை ஏற்படுத்துபவையாக இருக்கும்.
அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் ஈழம்
அமைப்பதற்காக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கைத்

தமிழர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என
தெரிவித்துள்ளது தொடர்பாக கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “புலம்பெயர்ந்த தமிழர்கள் இதில் எவ்வாறு பங்கு கொள்ள முடியும்? அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல. அவர்கள் வேறு நாட்டுப் பிரஜைகளாகவே உள்ளார்கள். அந்த நாடுகளில் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்புகளில் மட்டுமே அவர்கள் பங்குகொள்ள முடியும்’ எனத் தெரிவித்தார்.

போருக்கு பின்னரான நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் சர்வதேச ரீதியாக
விமர்சனங்கள், முன்வைக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு
பதிலளித்த ஜனாதிபதி “எம்மால் முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளோம்.

இடம்பெயர்ந்த மக்களை நாம் மீளக் குடியமர்த்தியுள்ளோம். அவர்களுக்கு
மின்சாரம், வீதிகள், பாடசாலைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. போர்
இடம்பெற்ற பகுதிகளில் 94வீதமான பகுதிகளில் இருந்து கண்ணி வெடிகளை
நாம் அகற்றியுள்ளோம். இந்த நிலையில் எமக்கெதிராக தெரிவிக்கப்படும்
குற்றச்சாட்டுகள் நியாயமற்றவைகளாகும்’ எனக்குறிப்பிட்டார்.

“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கைக்கு அமைச்சரவை 2012ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே
அங்கீகாரத்தை வழங்கியது. அதில் உள்ள 280 பரிந்துரைகளையும்
நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு பத்தொன்பது மாதங்களே இருந்தன. காணி உரிமை, மொழி போன்றவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு காலம் எடுக்கும்’ எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்கா இலங்கைக்கு எதிராகச் செயற்படுவது, கலியஸ்கிலே என அறியப்பட்ட குத்துச் சண்டை வீரர் முகமத் அலியுடன் பாடசாலை மாணவன் ஒருவருடன் மோதுவதைப் போன்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணைகளை கொண்டு வருவது ஆட்சி மாற்றத்திற்காகவா? என்று கேட்ட போது,
“அவர்களிடம் இரகசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இருக்கலாம். ஆனால், மக்களுடைய ஆதரவு எனக்கு இருக்கும் வரையில் அதனையிட்டு நான் கவலைப்படப் போவதில்லை’ எனத் தெரிவித்தார். 

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படுவது கலியஸ்கிலே என அறியப்பட்ட குத்துச் சண்டை வீரன் முகம்மத் அலியுடன் பாடசாலை மாணவன் ஒருவன் மோதுவதைப் போன்றதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளும் தம்முடைய
உள்நாட்டு தேர்தல் நிர்பந்தங்கள் காரணமாகவே இலங்கை தொடர்பான
நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இலங்கைக்கு எதிராக சர்வதேச தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியக்
கூறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட போது “அவ்வாறான தடைகள் எதனையும்
மனித உரிமைகள் பேரவையால் விதிக்க முடியாது. தனிப்பட்ட நாடுகளே
அவ்வாறான தடைகளை விதிக்க முடியும். ஐ.நா. பாதுகாப்பு சபைகள் மட்டுமே
சர்வதேச தடை ஒன்றுக்கான உத்தரவினை பிறப்பிக்க முடியும்.

அங்குகூட சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வீட்டோ உரிமைகளை கொண்டுள்ளது.

அவை இலங்கையின் நட்பு நாடுகளாகும்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்காவின்
அனுபவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்கப்பட்டபோது, “இது
தொடர்பாக பேச்சு வார்த்தைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று
வருகின்றன. இரண்டு தரப்பு பிரதிநிதிகளும் மற்றைய நாட்டிற்கு விஜயத்தை
மேற்கொண்டு உள்ளார்கள்’ என ஜனாதிபதி பதிலளித்தார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் மத்தியஸ்த முயற்சி ஒன்றை
ஜப்பான் மேற்கொள்கின்றதா? என கேட்கப்பட்ட போது, “எந்தவொரு நாடுமே
மத்தியஸ்தப் பணியை மேற்கொள்ளவில்லை’ என தெரிவித்த ஜனாதிபதி
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஜப்பான் வாக்களிக்கவில்லை என குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தப்படுவதற்கு திட்டம் ஒன்று உள்ளதா என கேட்கப்பட்டபோது, “என்னுடைய ஆறு வருட பதவிக்கால முடிவில் 2016ஆம் ஆண்டில் தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

- See more at: http://www.thinakkural.lk/article.phplocal/gtogmizgit67618ab70731b116340kkrae553f17c11a3bbc87e0b605rggg5#sthash.TK5KfutM.dpuf

, “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை! மாவை சம்பந்தன்

 “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம்  இருந்ததில்லை``

மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரும், தனித்தனியாக தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களில், “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் வாழும், தேசபக்தி மிக்க இலங்கையர் நாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை இலங்கை உயர்நீதிமன்றம்,
வரும் மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மிகவும் சுவாரசியமான வழக்கு இது.

“இந்த இரு தமிழ் கட்சிகளின் இலக்கு, இலங்கையில் ஈழம் என்ற பெயரில்
தனிநாடு அமைப்பது என்பதை நீதிமன்றம் பிரகடனம் செய்ய வேண்டும்” என,
ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. “அப்படி ஈழம் அமைக்கும்
நோக்கமே எமக்கு கிடையாது” என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மற்றும் தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இனி விசாரணையின்போது, இவர்களுக்கு ஈழம் வேண்டுமா, இல்லையா என்பது முடிவு செய்யப்பட வேண்டும்.

இலங்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், மற்றும்
நீதிபதிகள் சந்திரா ஏக்கநாயக்க, பீ.பி அலுவிஹார ஆகியோர் முன்னிலையில்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய
கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில், முதலில் கூறப்பட்ட இருவரும், ஈழம் அமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளவர்கள் எனவும், அப்படி ஒரு நோக்கம் அவர்களுக்கு உள்ளது என்று தெரிந்தும், அவர்களது கட்சிகளை தேர்தல்களில் போட்டியிட அனுமதித்தது தவறு என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீதும், 5 மனுக்களிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரும், தனித்தனியாக தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களில், “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் வாழும், தேசபக்தி மிக்க இலங்கையர் நாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை, வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான செய்திகளை அதிகம் வெளியிடாமல் அடக்கி
வாசிக்கும்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மீடியாக்களுக்கு
சொல்லப்பட்டுள்ளது. “எமக்கு வேண்டாம் ஈழம்” என்று இவர்கள் வாதாடுவதால், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் புலம்பெயர் தமிழர் நிதி வசூல்கள் பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://tamil.north-lanka.com/2014/01/23/60123/

தொடரும் தமிழக அரசின் அராஜகம் . ஈழத் தமிழர் செந்தூரன் மீண்டும் சிறப்பு முகாமில் அடைப்பு !



சென்ற ஆண்டு பூந்தமல்லி சிறப்பு முகாமில் 42 நாட்கள் கடுமையான உண்ணா நிலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் செந்தூரன் . தானும் மற்ற முகாம்வாசிகளும் விடுதலை அடைய வேண்டும் என உண்ணா நிலைப் போராட்டம் செய்த செந்தூரனுக்கு ஒட்டுமொத்த தமிழகமே ஆதரவு தந்தது . தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் செந்தூரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பலனாக இறுதியில் செந்தூரன் விடுவிக்கப்பட்டார். செந்தூரன் மட்டுமல்லாமல் 30 மேற்பட்ட ஈழத் தமிழர்கள் விடுதலை ஆனார்கள்.

செந்தூரன் விடுதலை பெற்று தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். எனினும் தமிழக அரசின் கியூ பிரிவு காவல்துறை செந்தூரனை விடுவதாக இல்லை . செந்தூரனை நாடுகடத்த வேண்டும் என சதி செய்தது . அவரை நாடுகடத்த உத்தரவையும் பெற்றது . இதற்கிடையில் செந்தூரன் தன்னை நாடுகடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து செந்தூரனை நாடு கடத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கியூ பிரிவு காவல்துறை வேறு வழிகளில் செந்தூரனுக்கு தொந்தரவு கொடுத்து வந்தது. செந்தூரனின் உறவுக்கார பெண்மணியை வைத்து செந்தூரனை வேவு பார்த்தது. இதனை அறிந்த செந்தூரன் உறவுக்கார பெண்மையை கண்டித்து உள்ளார் . இதையே காரணமாக வைத்து செந்தூரான் உறவுக்கார பெண்ணை தாக்கினார் என்று பொய் வழக்கு போட்டு செந்தூரனை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

மூன்று வாரம் சிறைவாசம் அனுபவித்து சிறையில் இருந்து வெளியேறிய செந்தூரனை கியூ பிரிவு காவல்துறை அகதிகள் சிறப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு அகதிகள் முகாமில் அடைத்தது . எந்தவித காரணமும் இன்றி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தூரன் இப்போது சிறப்பு முகாம்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் . இன்றுடன் நான்காவது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார் . தமிழக அரசின் சார்பில் அவருக்கு எந்த வித கரிசனமும் காட்டப்படவில்லை. செந்தூரனை நாடு கடத்தவே இன்று வரை முயற்சி செய்கிறது தமிழக அரசு . செந்தூரன் இலங்கை சென்றால் நிச்சயம் இலங்கை அரசு அவரை சாகும்வரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் அல்லது கொன்றுவிடும். தஞ்சம் தேடி தமிழகம் வந்தாலும் தமிழக அரசும் இலங்கை அரசைப் போலவே நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக செந்தூரன் தெரிவித்து உள்ளார் .

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர் ஏன் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களை மூட மறுக்கிறார்? சிறப்பு முகாம்களில் தவிக்கும் பல தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சொல்லவொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் . இவர்களை விடுதலை செய்து தமிழர்களுக்கு நீதி வழங்காமல் , ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவேன் என தமிழக முதல்வர் சொல்வது கபட நாடகமாக தெரிகிறது என்று கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள் . உண்மையில் ஈழத் தமிழர்கள் மேல் தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால் முதலில் செந்தூரன் மற்றும் அனைத்து சிறப்பு முகாம் வாசிகளையும் உடனடியாக விடுதலை செய்யட்டும் என்று கூறிகின்றனர் தமிழீழ ஆதரவாளர்கள் . செய்வாரா முதல்வர் ?

தகவல் இணையம்

Sunday, March 09, 2014

ஐ.நா.மேடையில் இலங்கை நாடகம் அங்கம் மூன்று!



ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.இக்கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களும் ஒரு விவாதப் பொருளாக நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளது. 

இதில் முக்கியமாக,

1) ஒடுக்கும் சிங்களத்திடமிருந்து,  விடுதலை பெற, ஒடுக்கப்படும் ஈழ தேசிய இனம் நடத்திய, தமிழீழ விடுதலைப் போரை நசுக்க ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், சிங்களமும் இணைந்து நடத்திய ஈழ தேசிய இனப்படுகொலை யுத்தம், மூடி மறைக்கப்பட்டு,

2) அந்த யுத்தத்தில் மனித உரிமைகளை மீறிய யுத்தக் குற்றங்கள் இரு தரப்பாலும் இழைக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டு, 

3)இந்த மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை மீது விசாரணை வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியவாதிகள் ஐ.நா.மேடையில் அரங்கேற்றிவரும் இந்த நாடகத்தின் மூன்றாம் அங்கம் இந்த 25 ஆவது கூட்டத்தொடர் ஆகும்.

வருடா வருடம் இந்த சர்வதேசத் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக அமைவது சனல் 4 தொலைகாட்சியின் `மனித உரிமை மீறல் ``புதிய`` ஆதாரமாகும்`.நிகழ்ச்சி புளித்து சலித்து போய்விடாமால் உணர்ச்சி புல்லரித்துக் கொண்டிருக்க அல்லது புல்லரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க இந்த ``புதிய`` ஆதாரங்கள் அவசியமாகின்றன.இவ்வாறு இந்த ஆண்டு வெளி வந்த ``புதிய`` ஆதாரம் மேலே இணைப்பில் உள்ளது.இது குறிப்பாக சிங்கள இராணுவம் யுத்தத்தின் போது நடத்திய காம வெறியாட்டம் பற்றிய சில விநாடிக் காட்சிகளைக் கெளரவமாகக் காட்டியிருக்கின்றது.``தமிழ்ப் புலிகள் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள், ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு பொறுப்பானவர்கள்`` எனப்பிரகடனம் செய்துள்ளது. 

இந்த ``புதிய`` ஆதாரங்கள் சனல் 4 தொலக்காட்சிக்கு பிரித்தானிய தமிழர் பேரவையால் கையளிக்கப்பட்டதாக உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது.
`தமிழ்ப் புலிகள் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள், ஆயிரக்கணக்கான  மக்களின் மரணத்துக்கு பொறுப்பானவர்கள்``, பிரித்தானிய தமிழர் பேரவையின் நிலைப்பாடு என்ன?

இலங்கையில் நடைபெற்ற பொது நலவாய அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமெரன் `மார்ச் 2014 இற்குள் இலங்கை அரசாங்கம் ஒரு நீதி விசாரணையை நடத்தத் தவறினால், ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது கூட்டத்தொடரில் ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு தனது அரசாங்கம் அழைப்பு விடுக்கும் எனப் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.ஆனால் பிரித்தானியாவும்,அமெரிக்காவும் மற்றும் மூன்று நாடுகளும் முன்வைத்த தீர்மானம்,சிங்களத்துக்கு மேலும் ஒரு வருடம் அவகாசம் அளித்துள்ளது.

இந்த ஒரு வருடத்தில் ஈழதேசிய இனப்படுகொலையாளன் ராஜபக்ச அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று விடுவான்.ஆட்சித் தலைவன் என்கிற முறையில் மேலும் 5 ஆண்டுகள் யுத்தக்குற்ற தண்டனையில் இருந்து சிறப்பு விதிவிலக்கு பெற்றுவிடுவான்.

ஆக இந்த நாடகத்தில் இன்னும் 5 அங்கங்கள் வரவுள்ளன!

அமெரிக்க கடவுளின் அடியார்களும், ஐ.நா.பக்தர்களும், ஜெனிவாக் காவடியை, பிரதட்டையை தொடர்வார்களாக!

சிங்களம் ஈழதேசிய ஆக்கிரமிப்பை தொடருமாக!

இந்தியா இராணுவப் பயிற்சி அளிக்குமாக!

அமெரிக்கா நிதி அள்ளி குவிக்குமாக!

ஈழத்தமிழன் மீண்டும் ஏமாறுவானாக.

செய்தி விமர்சனம்: சுபா

சமரன்: எழுவர் விடுதலை, ம.ஜ.இ.க.கடலூர், தர்மபுரி ஆர்ப்பாட்...

சமரன்: எழுவர் விடுதலை, ம.ஜ.இ.க.கடலூர், தர்மபுரி ஆர்ப்பாட்...:









* ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலையை கோரிய ம.ஜ.இ.க. கடலூர், தர்மபுரி ஆர்ப்பாட்டத்திற்கு தடை!  

* தர்மபுரி கழக அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் கைது!!

* 7 பேரின் விடுதலைக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்!!!


Saturday, March 08, 2014

DOWN WITH THE NEO NAZI COUP IN UKRAINE!




Ukrainian Neo -Nazis and fascists, supported by the EU and the USA, destroy the offices of the Communist Party of Ukraine. 

Ουκρανοί Νεοναζί και Φασίστες, υποστηριζόμενοι από ΕΕ και ΗΠΑ, βανδαλίζουν τα γραφεία του Κομμουνιστικού Κόμματος της Ουκρανίας.

Українські неонацисти і фашисти, за підтримки ЄС і США, знищити офіси Комуністичної партії України.

DOWN WITH THE FASCISTS AND THE EU!
DOWN WITH THE NEO NAZI COUP IN UKRAINE! 
 SOLIDARITY AND SUPPORT FOR THE 
 UKRAINIAN COMMUNISTS AND HER PEOPLE! 

SONG: MAVRA KORAKIA / Μαύρα Κοράκια / чорні ворони. (Arbeiter von Wien - Greek Partisan Version).

Friday, March 07, 2014

ENB WEST: R.I.P. Freedom of Speech? Obama Bans Critics of U...

ENB WEST: R.I.P. Freedom of Speech? Obama Bans Critics of U...:



R.I.P. Freedom of Speech? Obama Bans Critics of Ukraine Coup From Entering U.S.
Executive order suspends entry rights of anyone who “undermines” Ukrainian “democracy”
By Paul Joseph Watson
Global Research, March 07, 2014

சமரன்: இந்திய அரசே! ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின...

சமரன்: இந்திய அரசே! ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின...:



இந்திய அரசே, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமூல்படுத்து!




*  7 பேரின் விடுதலைக்கு எதிராகச் சதி செய்யும் பாசிச காங்கிரஸ், பா.ஜ.க. கும்பல்களை முறியடிப்போம்!

 * ஈழத்தமிழருக்கு எதிரான பாசிச கும்பல்களுக்குத் துணைபோகும் தமிழ்த்தேசியம் பேசுவோரின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!

 * ஈழ விடுதலைக்கு ஆதரவாக புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு         மார்ச் 2014

Thursday, March 06, 2014

புதிய ஈழம்: புதிய பாதை! புதிய ஈழம்!

புதிய ஈழம்: புதிய பாதை! புதிய ஈழம்!:



புதிய பாதை! புதிய ஈழம்!  இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம்,லண்டன் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு,ஜெனீவா நீதிப்பயணம்- ஒரு ஊடறுப்புச் சமர்!

* ஈழதேசிய இனப்படுகொலை அரசை தொடர்ந்து பாதுகாக்கும் ஏகாதிபத்திய ஐ.நா.அமைப்பின் துரோகத்தை எதிர்ப்போம்!

* தமிழ்த் தரகு அணியின் சமரச சந்தர்ப்வாத ஏகாதிபத்திய தாச ஐ.நா.நீதிப்பாதையை நிராகரிப்போம்! 

* இலங்கையில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும்,அரசு சாரா நிறுவனங்களையும் ஒருபோதும் அநுமதியோம்!

* போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்போம்!

* புதிய ஈழம் அமைக்க புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்!!


புதிய ஈழப்புரட்சியாளர்கள்.
படியுங்கள்! பரப்புங்கள்!!

புதிய ஈழம்: புதிய பாதை! புதிய ஈழம்!

புதிய ஈழம்: புதிய பாதை! புதிய ஈழம்!:



புதிய பாதை! புதிய ஈழம்!  இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம்,லண்டன் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு,ஜெனீவா நீதிப்பயணம்- ஒரு ஊடறுப்புச் சமர்!

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...