SHARE

Monday, July 01, 2013

லண்டன்: அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்


லண்டன்: அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும் 290613

லண்டன்: அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்

நேற்றுமுன் தினம் சனிக்கிழமை 29-06-13 அன்று ஹரோவில் தமிழீழ அரசியல் கலந்துரையாடலும், சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும் 
இடம்பெற்றது. மாவீரர் உறவுகளின் பேராதரவுடன் புதிய ஈழ புத்தக நிலையம் (NEBH), இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அன்றாட வாழ்வின்
நெருக்குதல் கருதி, காலை 10 மணிமுதல் பகல் 1 மணிவரை, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை, இரவு 11மணிமுதல் விடிகாலை 1.00
மணிவரை  என மூன்று காலநிரலில் இந்நிகழ்வு அமைந்தது.குறிப்பிடத்தக்க மக்கள்  இத் தொடர் சுற்று அறை அரங்கத்தில் கலந்து கொண்டனர்.
 
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழரின் தேவை தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசு!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
 
தகவல்:புதிய ஈழ புத்தக நிலையம் (NEBH)

Tuesday, June 18, 2013

அறிமுகம்: புதிய ஈழ புத்தக நிலையம்


 
ENB இணைய குடும்பத்தில் மற்றொரு குழந்தையாக `புதிய ஈழ புத்தக நிலையம்` NEBH, இணைந்து கொண்டுள்ளது என்பதை தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.

உலக சோசலிச, மற்றும் புதிய- தேசிய ஜனநாயகப் புரட்சிகர சர்வ தேசிய இயக்கத்தின் அறிவார்ந்த வெளியீடுகளை உழைக்கும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை NEBH தனது தலையாய பணியாகக் கொண்டுள்ளது.

NEBH புரட்சிகர அரசியல் இலக்கிய வெளியீடுகளின் (இலாப நோக்கற்ற)   விற்பனை நிறுவனமும், அதே வேளை .புரட்சிகர இலக்கிய வெளியீடுகளின், சர்வதேச அரசியல் விவகார வெளியீடுகளின் அறிமுகத் தளமுமாகும்.

சமூக மாறுதலை வேண்டிநிற்கும் சமுதாய சக்திகளுக்கு இவ்விணையம் காணிக்கை!
 
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Sunday, June 09, 2013

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் - நூல் வெளியீட்டு நிகழ்வு

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் - நூல் வெளியீட்டு நிகழ்வு

சமரன் வெளியீட்டகத்தின் `ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்` நூல் வெளியீட்டு விழா 12/06/13 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

சோலையார் பேட்டை இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாருதி திருமண மண்டபத்தில் இந்நிகழ்வு இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு ம.ஜ.இ.க. வேலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் க.குணாளன் தலைமை ஏற்கிறார்.

ம.ஜ.இ.க. மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் அவர்கள் நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரை ஆற்றுவார்.

முதல் வெளியீட்டு நூலை திருப்பத்தூர்-வேலூர் மாவட்ட  பெரியார் திராவிடக் கழக செயலாளர் தோழர் A.D.G.கெளதமன் பெற்றுக்கொள்கிறார்.

ம.ஜ.இ.க. தோழர்கள் மா.குணாளன்- தஞ்சை, தோழர் மனோகரன் சென்னை ஆகியோர் கருத்துரை வழங்குவர்.

இறுதியில் மக்கள் கலை மன்ற கலை நிகழ்ச்சி இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்துக்கும் நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஜீவா
முன்னிலை வகிப்பார்.

Thursday, May 30, 2013

வெளிவந்துவிட்டது ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - சமரன் நூல்


வெளிவந்துவிட்டது ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - சமரன் நூல்
 
 
தொடர்புக்கு : 0091 9941611655
 samaranpublisher@gmail.com; samaranvelietagam@yahoo.com
 

ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்.
http://senthanal.blogspot.co.uk/2013/05/blog-post_6638.html

Wednesday, May 29, 2013

நல்லிணக்கத்துக்கு எதிரான பக்ச பாசிச,பிக்கு பிசாசுகளின் முன்னணியைத் தோற்கடிக்க `தமிழீழப் பிரிவினையை உயர்த்திப் பிடிப்போம்!


புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே! மட்டுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பரிப்பு!!

புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே!
 மட்டுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பரிப்பு!!

* இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு?
* புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே!
*புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே!

மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பகுதிக்கு அருகில் புத்தர் சிலையினை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்
தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

ஊறணி பிரதேச பொதுமக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். மட்டு.பிள்ளையாரடியில்
ஆரம்பமான ஊர்வலம் புத்தர் சிலை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வரவேற்பு இடத்தை சென்றடைந்தது.
 
இந்த ஆப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு, புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே, புத்த
பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் புத்தர் சிலை வைப்பதற்கு எதிரான
கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத்த திலகரட்ன சிலை நிறுவ மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
எனினும் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
 
May 29, 2013 

பௌத்த விழுமியங்களுக்கு அமைவாகவே இலங்கையின் அரசியல் யாப்பு - பொதுபல சேனா

May 29, 2013

பௌத்த விழுமியங்களுக்கு அமைவாகவே இலங்கையின் அரசியல் யாப்பு  அமைய வேண்டும் - பொதுபல சேனா

இலங்கையின் அரசியல் அமைப்பு பௌத்த விழுமியங்களுக்கு அமைவாகவே  உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு
தெரிவித்துள்ளது. மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீக்குளித்த போவத்தே இந்திரரட்ன தேரரின் மறைவை  சிலர்
இழிவுபடுத்துகின்றனர் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மிருக வதை மற்றும் மதமாற்றத்திற்கு எதிராக நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மிருக வதைக்கு எதிராக பல்வேறு வழிகளில்
போராட்டங்கள் நடத்தப்பட்டன.நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மத தர்மத்திற்கு அமைவான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.

Lanka moves to reduce its trade surplus with US

Lanka moves to reduce its trade surplus with US By Sunimalee Dias and Tharushi Weerasinghe Sunday Times LK 13-04-2025 Govt. explores plans t...