SHARE

Wednesday, December 24, 2025

வேள்வி அமைப்பின் மலையக நிவாரணம்

 டிட்வா மலையக அனர்த்தம்- அம்பாறை மாவட்டத்தில் உதவி நிவாரணம்.

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி: 

இந் நிவாரணப் பணியானது அம்பாறை மாவட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உத்தியோகஸ்தர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வேள்விப் பெண்கள் அமைப்பினர், காரைதீவு வலைய பாலர்பாடசாலை ஆசிரியர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரது அயாராத உழைப்பின் வெகுமதியே ஆகும்.

இப்பணியில் வேள்வி பெண்கள் அமைப்பினர், அடிமட்ட மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து சேகரித்த `சிறு துளிகள்` பெரும் முக்கியத்துவமுடையவை. மேலும் மிக மிக குறைந்த வருமானம் பெறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிதி உதவி அளப்பரியதாகும். இத்துடன் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வாழும் இளைஞர்களின் ஊக்கமிக்க உதவி குறிப்பிடத்தகுந்ததாகும். 

அரேபிய,ஐரோப்பிய நாடுகளில் இருந்து எமக்குக் கிடைத்த நிதி உதவி பேருதவி ஆகும்.

டிட்வா சூறாவளி நாடு தழுவிய அனர்த்தம் என்ற போதிலும் இது மலையகத்தைப் பாதித்தவிதம் முற்றிலும் வேறானதாகும்.மலையகத்தின் கதை பூமி பிழந்த கதையாகும். மலையகமே சாய்ந்து சரிந்த கதையாகும்.மீள் கட்டுமானம் என்பது நீண்ட நெடிய பாரிய பணியாகும்.

ஆதலால் வேள்வியின் மலையகப் பணியானது இந் நிவாரணப் பணியோடு நிறுத்தப்படப் போவதில்லை. எமது மலையகப் பயணம் அம்மக்களோடு தொடர்ந்து பயணிக்கும்.

இந் நிவாரணப் பணியில் தோளோடு தோள் கொடுத்து நின்ற அனைத்து அன்பர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், தோழர்கள், வளமானோர், வணிகர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த அன்பையும் நன்றியும் தெரிவித்து நிற்கின்றோம். மேலும் இவ்வேளையில் நமது தொடர்ந்த பயணத்துக்கு தங்கள் உதவியையையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். 

வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் 

நிதி கையளிப்பு

நிதிக் கணக்கெடுப்பு

ஆடைகள் தரம் பிரிப்பு


பொதியிடல்


லேபிலிடத் தயாராக


இளம் பெண் ஆடைகள்

லேபிலிடப்பட்ட பொதிகள்

நிவாரணப் பயணம்:

மலையகத்தை நோக்கிய எமது நிவாரணப் பயணம் 23-12-2025 அதிகாலை 4.00 மணியளவில் ஆரம்பித்தது. அன்று காலை நாம் கல்முனையில் இருந்து புறப்பட்டோம்.முற்பகல் 11.00 மணியளவில் கண்டிக் காரியாலயத்தைச் சென்றடைந்தோம்.

நமக்காக ஒதுக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம் மண்சரிவு அபாயம் காரணமாக பல பகுதிகளில் சிறிய சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் எல்லாப் பகுதிக்கும் செல்வது சாத்தியமற்றதாய் இருந்தது.

கண்டி செல்லும் வழியில்

அதனால் நாம் முடிந்த சில பகுதிக்கு செல்வதோடு, மிகுதிப் பகுதிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை கண்டி நிர்வாகத்தினருக்கு கையளித்தோம்.


சாத்தியமான பகுதிகளில் மக்களை நெரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கினோம்.

பேரிடரின் அனர்த்தம் நேரில் பார்ப்பதற்கு நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.

அண்மைய பகுதிகள் சிவப்பு எசரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்.நிலம் கீழே போவதைப் பார்க்க முடிந்தது.

செல்லவேண்டிய இடத்துக்கு வாகனத்தில் செல்ல இயலவில்லை. பொதிகளை நாமே தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.

நாம் ஏற்கெனவே களைத்துப் போய்விட்டோம்.

ஒரு பகுதிக்கு ஓட்டோ மூலம் எடுத்துச் செல்ல வாய்ப்புக் கிட்டியது.



இது உடனடி எதிர்காலத்தில் தீர்வு காணக்கூடிய பிரச்சனை இல்லை என்பது மட்டும் உறுதி.

இந்தப் பகுதிகளில் இனிமேல் மக்கள் மீளக் குடியமர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

வேள்வியின் தொடர்ந்த பணியின் அவசியத்தை இந்தப் பயணம் நன்கு உணர்த்தியது.

நிவாரணப் பொதிகளை இறக்கி விட்டு, எதிர்காலப் பணியின் சுமையோடு அன்று பிற்பகலே கனத்த மனத்தோடு கல்முனை நோக்கிப் புறப்பட்டோம். 




நன்றி

தகவல்: மலையகத்திலிருந்து வேள்வி நிருபர் RBM

மூலம்: சமூக ஊடகம்

No comments:

Post a Comment

வேள்வி அமைப்பின் மலையக நிவாரணம்

 டிட்வா மலையக அனர்த்தம்- அம்பாறை மாவட்டத்தில் உதவி நிவாரணம். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து ந...