21.12.2025 ஞாயிற்றுக்கிழமை
இரவு 9.30 மணி
நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு
( ஜனவரி 2026 வரை )
⬛ இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை(22.12.2025) இரவு முதல் படிப்படியாக குறைவடையும் வாய்ப்புள்ளது.
⬛ எதிர்வரும் 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
⬛ இதன் காரணமாக மீண்டும் எதிர்வரும் 28.12.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை எதிர்வரும் 07.01.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஆனால் இடையில் ஒரு சில நாட்கள் மழையற்ற நாட்களாக அமையும்.
⬛ அதேவேளை எதிர்வரும் 31.12.2025 முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு மழை கிடைக்க தொடங்கும். இப்பிரதேசங்களுக்கும் மழை எதிர்வரும் 07.01.2026 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் எதிர்வரும் 10.01.2026 முதல் 13.01.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
⬛ எதிர்வரும் 2026 ஜனவரி மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
⬛ தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான வானிலை எதிர்வரும் 26.12.2025 முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது.
⬛ விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு தமது விவசாய நடவடிக்கைகளைத் திட்டமிடுவது சிறப்பானது.
இது ஒரு நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு என்பதனால் இதில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
2025.12.21 ඉරිදා රාත්රී 9.30
ශ්රී ලංකාවේ ගිනිකොන දෙසින් බෙංගාල බොක්කෙහි නිර්මාණය වී ඇති වායු සංසරණය දැනට මාලදිවයින අසල පිහිටා ඇත.
⬛ එහි ප්රතිඵලයක් ලෙස, නැගෙනහිර, ඌව, සබරගමුව, මධ්යම සහ දකුණු පළාත්වලට ලැබෙන වර්ෂාපතනය හෙට රාත්රියේ සිට ක්රමයෙන් අඩු වීමට ඉඩ ඇත.
⬛ 2025.12.28 වන දින බෙංගාල බොක්කෙහි ශ්රී ලංකාවේ ගිනිකොන දෙසින් නව වායු සංසරණයක් ඇති වීමට ඉඩ ඇත.
⬛ මේ හේතුවෙන්, 2025.12.28 සිට උතුරු සහ නැගෙනහිර පළාත්වලට නැවත වැසි ලැබීම ආරම්භ වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මෙම වර්ෂාව 2026.01.07 දක්වා පවතිනු ඇත. නමුත් ඒ අතරතුර, වැසි රහිත දින කිහිපයක් පවතිනු ඇත.
⬛ මේ අතර, මධ්යම, ඌව, උතුරු-මැද, දකුණු සහ සබරගමුව පළාත්වලට 2025.12.31 සිට වැසි ලැබීම ආරම්භ වනු ඇත. මෙම ප්රදේශවලට 2026.01.07 දක්වා වැසි ලැබෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
⬛ 2026.01.10 සිට 2026.01.13 දක්වා උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්රදේශවල වැසි බහුලව ඇති වීමට ඉඩ ඇත.
⬛ උතුරු සහ නැගෙනහිර පළාත්වල දැනට පවතින සීතල කාලගුණය 2025.12.26 සිට අඩු වීමට ඉඩ ඇත.
⬛ ගොවීන් මෙම දින සලකා බලා තම කෘෂිකාර්මික කටයුතු සැලසුම් කිරීම සුදුසුය.
⬛ මෙය දිගුකාලීන කාලගුණ අනාවැකියක් වන අතර සමහර වෙනස්කම් සිදුවිය හැකි බව කරුණාවෙන් සලකන්න.
නාගමුතු ප්රතීපරාජා
No comments:
Post a Comment