15.12.2015 திங்கட்கிழமை இரவு 11.00 மணி
* வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது.
* அதேவேளை இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்றும் உருவாகியுள்ளது.
- இதன் காரணமாக இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை முதல்(16.12.2025), வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமழையையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- இம்மழை எதிர்வரும் 19.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது
- இந்த மழை நாளை மறுதினம் (17.12.2025) நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 17.12.2025 அன்று கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- அதேவேளை நாளை முதல் (16.12.2025) வடக்கு, கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சற்று பலமான காற்று வீசும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன. வான் பாயும் நிலையிலும் உள்ளன. இதனால் அடுத்து வரும் நாட்களில் கிடைக்கும் மழை இந்தக் குளங்களின் வான் பாயும் நீரின் அளவை அதிகரிக்க கூடும்.
அதேவேளை நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளதனால் மேலதிகமாக கிடைக்கும் 75 மி.மீ. மழை கூட சில தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆழ்கடற் பகுதிகளுக்கு பலநாட் கலங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்கள் வேகமான காற்று மற்றும் அதிக உயரம் கொண்ட கடலலைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது.
நாகமுத்து பிரதீபராஜா -
උතුරු, නැගෙනහිර සහ උතුරු මැද පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්රදේශවල බොහෝ පොකුණු පිරී ඉතිරී ගොස් ඇත. ඒවා ද පිරී ඉතිරී යන තත්ත්වයක පවතී. එබැවින්, ඉදිරි දිනවලදී ලැබෙන වර්ෂාව මෙම පොකුණුවල ගලා යන ජල ප්රමාණය වැඩි කළ හැකිය.
ඒ සමඟම, රටේ බොහෝ ස්ථානවල, විශේෂයෙන් උතුරු සහ නැගෙනහිර පළාත්වල භූමිය සංතෘප්ත ස්ථානයට ළඟා වී ඇති බැවින්, අමතර මිලිමීටර් 75 ක වර්ෂාපතනයක් පවා සමහර පහත් බිම් ප්රදේශවල ගංවතුරට හේතු විය හැක. එබැවින්, මේ සම්බන්ධයෙන් විමසිලිමත් වීම අවශ්ය වේ.
මේ අතර, දින කිහිපයක් තිස්සේ ශ්රී ලංකාවේ නැගෙනහිර, ගිනිකොන, දකුණු සහ නිරිතදිග ගැඹුරු මුහුදු ප්රදේශවලට ධීවර කටයුතු සඳහා ගිය අය තද සුළං සහ අධික රළ පිළිබඳව දැනුවත් විය යුතුය.
- නාගමුතු ප්රදීපරාජා -
15.12.2015 Monday night 11.00 PM
A new air circulation has formed in the Bay of Bengal to the southeast of Sri Lanka. It is currently located 408 km southeast of the Ukanthai.
Meanwhile, a low-level atmospheric disturbance has formed centered over the southern part of Sri Lanka.
Due to this, moderate to heavy rain is likely to occur in the Northern, Eastern, Central, Uva, Southern and North Central provinces from midnight today or early morning tomorrow (16.12.2025). Very heavy rain is also likely to occur at a few places.
This rain is likely to continue until 19.12.2025.
This rain is likely to occur in most parts of the country the day after tomorrow (17.12.2025). In particular, many parts of the Northern, Eastern, Uva, Central, North-Central, Sabaragamuwa and Western provinces are likely to receive heavy rain on the upcoming 17.12.2025.
Meanwhile, from tomorrow (16.12.2025), there is a possibility of slightly strong winds blowing over the coastal areas of the Northern, Eastern, Uva and Southern provinces. In particular, the wind speed is expected to be 30–40 km/h.
No comments:
Post a Comment