
11.12.2025 வியாழக்கிழமை இரவு 9.30 மணி
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது.
ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 13.12.2025 வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் எதிர்வரும் 13.12.2025 வரை கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அனர்த்தம் நிகழ்வதற்கும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளினதும் வளிமண்டலத்தில் ஈரப்பதன் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல இடங்களிலும் குளிரான வானிலை நிலவுகிறது. உணரக்கூடிய வெப்பநிலையும் குறைவாகவே உள்ளது. இது மேலும் சில நாட்களுக்கு தொடரும் வாய்ப்புள்ளது. எனவே குளிரான வானிலை தொடர்பான உணர்திறன் அதிகமுள்ளவர்கள் குறிப்பாக , வயதானவர்கள், நோயாளிகள் குழந்தைகள் அவதானமாக இருப்பது சிறந்தது.
வெப்பநிலை அளவுகளில் நிலவும் சுவாரசியமான நிலைமை காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக இரத்தினபுரி மாவட்டம் அதிகூடிய வெப்பநிலையை( சராசரியாக 31.5°C) பெறும் அதேவேளை நுவரெலியா அதிகுறைந்த வெப்பநிலையை(சராசரியாக 16°C) இனைப் பெறுகின்றது. இரண்டு பிரதேசமும் மிகப்பெரிய அளவு தூர இடைவெளியில் இல்லை. ஆனால் உயர வேறுபாடே மிகப்பெரிய வெப்பநிலை வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வாகவே காணப்படுகின்றது.இது சராசரியாக 28°C என்ற அளவில் காணப்படுகின்றது. பொதுவாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை 27°C இனை விட உயர்வாக இருந்தாலே கடலில் காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 17.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் புதிய ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை அடுத்த சில நாட்களுக்கு பின்பே உறுதிப்படுத்த முடியும்.எவ்வாறாயினும் எதிர்வரும் 16.12.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- நாகமுத்து பிரதீபராஜா -
2025.12.11 බ්රහස්පතින්දා රාත්රී 9.30
ශ්රී ලංකාවේ ගිනිකොන දෙසින් පවතින සුළං සංසරණය දුර්වල වී ඇත.
කෙසේ වෙතත්, ශ්රී ලංකාවේ නිරිතදිග කොටසේ පවතින වායුගෝලීය කැළඹිලි ස්වභාවය දිගටම පවතී.
එහි ප්රතිඵලයක් ලෙස, උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්රදේශවලට ලැබෙන වැසි 2025.12.13 දක්වා පවතිනු ඇත. එහි ප්රතිඵලයක් ලෙස, මහනුවර, නුවරඑළිය, මාතලේ, කෑගල්ල සහ බදුල්ල දිස්ත්රික්කවල සමහර ප්රදේශවල 2025.12.13 දක්වා නායයෑම් ඇතිවීමේ හැකියාවක් පවතී. එබැවින්, මෙම නායයෑම් සිදුවීම් සම්බන්ධයෙන් ජනතාව විමසිල්ලෙන් සිටීම අවශ්ය වේ.
ඒ සමඟම, උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්රදේශවල ආර්ද්රතා මට්ටමේ වෙනස්වීම් හේතුවෙන්, උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්රදේශවල සීතල කාලගුණයක් පවතී. ප්රත්යක්ෂ උෂ්ණත්වය ද අඩුය. මෙය තවත් දින කිහිපයක් පවතිනු ඇත. එමනිසා, සීතල කාලගුණයට සංවේදී අය, විශේෂයෙන් වැඩිහිටියන්, රෝගී දරුවන්, ප්රවේශම් වීම වඩාත් සුදුසුය.
උෂ්ණත්ව මට්ටම්වල සිත්ගන්නාසුලු තත්වයක් පවතී. පසුගිය දින කිහිපය තුළ රත්නපුර දිස්ත්රික්කයට ඉහළම උෂ්ණත්වය (සාමාන්ය 31.5°C) ලැබෙන අතර නුවරඑළිය අඩුම උෂ්ණත්වය (සාමාන්ය 16°C) ලබා ගනී. මෙම ප්රදේශ දෙක එකිනෙකාගෙන් විශාල දුරකින් පිහිටා නොමැත. නමුත් උන්නතාංශයේ වෙනස විශාල උෂ්ණත්ව වෙනසක් ඇති කර තිබේ.
අරාබි මුහුදේ, බෙංගාල බොක්කෙහි මුහුදු මතුපිට උෂ්ණත්වය ද ඉහළ ය. එය සාමාන්යයෙන් 28°C ලෙස නිරීක්ෂණය කෙරේ. සාමාන්යයෙන්, මුහුදු මතුපිට උෂ්ණත්වය 27°C ට වඩා වැඩි නම්, මුහුදේ වායු සංසරණයන් ඇතිවීමේ හැකියාවක් පවතී. ඉදිරි 2025.12.17 වන දින බෙංගාල බොක්කෙහි නව වායු සංසරණයක් ඇති වීමට ඉඩ ඇත. කෙසේ වෙතත්, මෙය තහවුරු කළ හැක්කේ ඉදිරි දින කිහිපයෙන් පසුව පමණි.
කෙසේ වෙතත්, 2025.12.16 දින සිට උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව රටේ බොහෝ ප්රදේශවල මධ්යස්ථ සිට තද වැසි ඇති විය හැකිය.
- නාගමුතු ප්රතිපරාජා -
Source: https://www.facebook.com/Piratheeparajah
No comments:
Post a Comment