SHARE

Saturday, February 22, 2025

அநுர ஆட்சியில் தவறாக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்: அம்பிகா சற்குணநாதன்

அநுர ஆட்சியில் துஸ்பிரயோகம் செய்யப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்: அம்பிகா சற்குணநாதன்

அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ்தள சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படவுள்ளனர் என்ற தகவல் உண்மை என்றால் இது பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்யும் செயலாகும்.

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவம் பயங்கரவாத சம்பவம் அல்ல, இச் சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது.

பயங்கரவாத குற்றமல்லாதவற்றிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும்போது அது (சாதரண சட்டம் போல்) வழமையானதாக மாற்றப்படுகின்றது.

இது அதல பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சியாகும்.தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது. நம்பகத்தன்மை மிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார் என ஒக்டோபர் 29ஆம் திகதி தகவல்கள் வெளியாகியிருந்தன.அரசியல் பழிவாங்கலுக்காக அதனை பயன்படுத்தமாட்டோம்,என அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அது முறையற்ற விதத்தில் செயற்படுத்தப்படுகின்றது என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அம்பிகா சற்குணநாதன்

Suspects in ‘Ganemulla Sanjeewa’ murder to be detained under PTA

February 20, 2025- adaderana.lk

The Colombo Crimes Division (CCD) has informed the Colombo Chief Magistrate’s Court that two suspects are currently in police custody in connection with the murder of “Ganemulla Sanjeewa” and that they will be detained under the Prevention of Terrorism Act (PTA) for further investigations.

Accordingly, the court was told that the suspected gunman of the shooting and the driver of the vehicle he used to flee were arrested and will be detained under the PTA for further investigations.🔺

No comments:

Post a Comment

India Pakistan - Diplomatic tensions

  India and Pakistan escalate diplomatic tensions after deadly Kashmir attack April 24, 2025  The Washington Post By Victoria Bisset India a...