SHARE

Monday, November 04, 2024

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்பேற்குமாறு பல சமாசங்களும் தனி நபர்களும் வேண்டிக் கொண்டதற்கு அமைய பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் 21-10-2024 அன்று பொறுப்பேற்றார்.

கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில்  இரானியேஸ் செல்வின் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர் விஜித கேரத் அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டு அதிகார பூர்வ கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து செல்வின் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இவர் இலங்கை நிர்வாக சேவையில் முதல் தர தகமை பெற்றவர். இதன் நிமித்தம் பல்வேறு பதவிகளை வகித்தவர்.ரணில் மைத்திரி ஆட்சிக்காலத்தில் இச்சபையிலும் பணி ஆற்றியவர். இந் நிலையில் புதிய அரசாங்கத்தினால் பனை அபிவிருத்தி சபை தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும் அனுரா ஆட்சி, செல்வின் பொறுப்பேற்று 24 மணி நேரத்தில் அவரது பொறுப்பைப் பறித்து பதவி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து திரு.செல்வின் அவர்கள் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வழங்கிய கருத்துக்களின் சுருக்கத்தை ENB வீடியோவில் காணலாம்.

இதற்கு மத்தியில் செல்வின் நியமனம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ரான்ஸ்பரன்சி இன்ரனஸனல் சிறீ லங்கா உடன் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.



No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...