SHARE

Friday, June 07, 2024

'இந்திய அமைதிப் படுகொலை'- நினைவேந்தல்

 இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்




இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. 

உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல்  நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்து. 


1989ஆம் ஆண்டு  வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் அவர்களின் நினைவாகவே நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.


நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அஞ்சலியின் பின் கருத்து தெரிவிக்கையில், 

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.


ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசு எவ்வித மன்னிப்பும் கோரவில்லை.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதியும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம். 

படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி போரின் பின் கடந்த 2012ம் ஆண்டளவில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபியை விரைவில் அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார்⍐. 

Source:pathivu.com

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...