SHARE

Saturday, May 25, 2024

மலையக ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து சேவைகளுக்கு இடையூறு.

 


மலையக ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால், இன்றும் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடுகன்னாவை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே ரயில் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதல்கஸ்ஹின்ன பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிக்கே ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக மழை மற்றும் காற்றுடனான வானிலையினால் ரயில் மார்க்கங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு கொழும்பு – பதுளைக்கிடையிலான இரண்டு இரவு நேர தபால் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தினக்குரல் 25-0-2024

No comments:

Post a Comment

The Fate of “America First”

  The Fate of “America First” U.S. President Donald Trump at a press conference, Palm Beach, Florida, January 2026 How the Assault on Venezu...