SHARE

Tuesday, May 21, 2024

7 மலையக மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!


9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

20 MAY, 2024 VK

கடும் மழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . 

இந்த எச்சரிக்கை நாளை (21) நண்பகல் 12.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்தால் மண்சரிவு ஏற்படும்  எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...