SHARE

Wednesday, December 06, 2023

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்

 

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்

Colombo (News 1st)  06 Dec, 2023

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர் நலத்திட்டங்கள், தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகள் – சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான வடிவேல் சுரேஷ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார். 


No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...