பிரசுரம் ENB 14-11-2023
ENB-Poster |
IMF அதானி 'வரவு செலவுத் திட்டத்தை'த் தோற்கடிப்போம்!
இன்று 13-11-2023 அன்று இலங்கை ஜனாதிபதி ரணில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்கிற தகுதியில் சமர்ப்பித்து நாட்டுமக்களுக்கு உரையாற்றியுள்ளார்.இது சம்பிரதாய பூர்வமாக ‘விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு’ ரணில் பக்ச பாசிஸ்டுக்களின் பெரும்பான்மையால் வெற்றி பெறும்.இதை நாடாளமன்ற ஜனநாயகத்தால் தோற்கடிக்க முடியாது.
வரவு செலவுத் திட்டம், நிதி நிலை அறிக்கை, பாதீடு என்றவாறு அழைக்கப்படும் Budget எனப்படுவது, தனிமனித குடும்ப வாழ்வில் நமது நிதி நிலைமைக்கு ’கணக்கு வழக்கு’ வைத்திருப்பது போன்ற ஒன்று என்ற பொருளில் ஒரு அரசாங்கத்தின் நாடு தழுவிய வருடாந்த ’கணக்கு வழக்கு’, வரவு செலவுத் திட்டம், நிதி நிலை அறிக்கை என அழைக்கப்படுகின்றது. இது கூறுகிறவாறு வரவு வரும் வழிகளையும், செலவு செல்லும் வழிகளையும் இது அறிக்கையிடுகின்றது.
இலங்கையின் 2024 Budget விவகாரத்தில் இது வரவு செலவுத் திட்ட அறிக்கையாக இல்லை.
ஏனெனில் வரவின் வழிகளான பொருளாதரத் திட்டங்களும், வரி வசூலிப்புகளும், செலவின் வழிகளும் IMF இனால் அந்நிய நிதி மூலதன நலனினால் திட்டமிடப்பட்டுள்ளது.உலகமறு பங்கீட்டு அரசியல் சூழல் காரணமாக இலங்கையின் தேச வாழ்வை இந்திய விரிவாதிக்கம் ஆக்கிரமித்த வண்ணமுள்ளது.இதனால் பொருளாதார வாழ்விலும் இந்திய விரிவாதிக்கத்தின் தலையீடு பெருகி வருகின்றது.இது அமெரிக்க முகாமின் பிராந்திய ஆதிக்கமாக செயலாற்றுகின்றது. மேலும் சீனாவுடனான (Belt And Road) போட்டியில் ஈடுபடுவதற்கு சீனா அளவுக்கு இந்தியா அரச மூலதன பலம் கொண்டதல்ல. இதனால் இந்தியா தன் உதவிக்கு தனியார் மூலதனத்துடன் கூட்டமைக்கின்றது. இயல்பாகவே இது இந்தியத் தனியார் மூலதனத்தின் பேராதிக்க சக்திகளான அதானி,அம்பானி கும்பலுடனான கூட்டாக வெளிப்படுவதில் வியப்பில்லை.கூடவே இந்தக் கூட்டு, சீனாவோடு போட்டி போட அமெரிக்காவும் பங்களிக்கின்றது.
பக்ச பாசிஸ்டுக்கள் உருவாக்கிய வங்குரோத்து ( April 2022) நிலையைப் பயன்படுத்தி, கட்டியிருந்த கோவணத்தையும் களைந்தெடுக்க IMF (கூடவே இந்தியாவும்) நிபந்தனைகளுடன் மேலும் கடன் அளித்தன.முதலாம் கொடுப்பனவு about $333m மார்ச்2023 இல் வழங்கப்பட்டது.IMF கடனின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவு-about $330m- இன்னும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை, தவணைக்கால நிபந்தனை இலக்குகளை இலங்கை எட்டவில்லை என்ற காரணத்தால்! 2024 ‘வரவு செலவுத் திட்டம்’ இந்த இலக்குகளை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும்!
$2.9bn அமெரிக்க டொலர்களை கடனாக வாங்குவதற்கு சம்மதித்து கையொப்பமிட்ட ஒப்பந்தம் வெறும் கடன் ஒப்பந்தம் அல்ல.
அது நாட்டின் நிதி வரவுக்கும், நிதிச் செலவுக்கும் ஆன ஒரு பொருளாதாரத் திட்டத்தை வகுத்தளித்தது. மேலும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அரசாங்கம் எப்படி அமைய வேண்டும், ஆட்சி எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டது. ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூட ஆணையிட்டது!
ரணில் பக்ச பாசிச கும்பலின் அரசும்,அரசாங்கமும், அபிவிருத்தியும் இவ்வாறு தான் IMF இனதும்,அதானி கும்பலினதும் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது அல்லது அரக்களைய ஏற்படுத்திய வெற்றிடத்தை அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் யுத்தத்திற்கு பின்னரும் தொடர்ந்து அதிகரித்தே வந்தது.இப்போது அதுவும் குறையத் தொடங்குகின்றது.ஏனெனில் இலங்கையின் இறையாண்மை,பாதுகாப்பு இந்தியாவின் அங்கமாகிவிட்டது.தன்னைப் பாதுகாக்க ஒரு படை இலங்கைக்கு இனி தேவை இல்லை, அதை இந்தியா பார்த்துக் கொள்ளும்.
IMFஅதானி திட்டத்தை வெறும் சம்பள உயர்வு சலுகைகள் அளித்து நிறைவேற்றிவிட முடியாது.அவ்வளவு இலகுவாக அரக்களைய ஓயாது. எனவே புதிய கறுப்புச் சட்டங்களும் அதை அமூலாக்க நவீன கலகம் அடக்கும் படையும், கருவிகளும் இருந்தால் போதும்.
இவையில்லாமல் IMFஅதானி திட்டத்தை நிறைவேற்ற முடியாது. புதிய பயங்கரவாத் தடைச் சட்டம், ஒன் லைன் பாதுகாப்புச் சட்டம், இதர விவசாய பொருளாதார, தொழிற்சங்க விரோத,ஊடக விரோத கறுப்புச் சட்டங்கள் அனைத்தும், அவற்றை ஏவி நடத்தும் அடக்குமுறைகளும் IMF அதானி நலன் காக்கவே!
இதனை நாடாளமன்ற ஜனநாயகத்தைக் கொண்டு தோற்கடிக்க முடியாது என்பது கண்கூடு.
நாடு தழுவிய ஒன்றுபட்ட, திட்ட வழிப்பட்ட மக்கள் கிளர்ச்சியே இதனைச் சாதிக்கும். அதற்கு அணி திரளுவதே நாட்டு மக்கள் அனைவர் முன்னும் உள்ள ஒரே கடமையாகும்.
தேச பக்தியின் பேரால் நாம் இதை நிறைவேற்றியே தீர வேண்டும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள் 14-11-2023
⍐
No comments:
Post a Comment