Macron proposes ‘international coalition’ against Hamas By Davide Basso | EURACTIV.fr 24 October 2023
ஹமாஸுக்கு எதிராக 'சர்வதேச கூட்டணி'யை மக்ரோன் முன்மொழிகிறார்.
இஸ்ரேலுக்கான விஜயத்தின் போது, பாலஸ்தீனியர்களின் பிரதேசத்திற்கான உரிமையை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ISIS-Daesh அமைப்புக்கெதிராக இருப்பது போன்ற ஒரு சர்வதேச கூட்டணி ஹமாஸை எதிர்த்துப் போரிடுவதற்கும் அவசியம் என்ற யோசனையை முன்வைத்தார்.
செவ்வாயன்று (அக்டோபர் 24) டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யு.எஸ். இன் வரையறையை ஏற்று ஹமாஸ் ஒரு "பயங்கரவாத குழு" என்று வர்ணித்தார்.ஹமாஸுக்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸ் இஸ்ரேலுடன் இணைந்து நிற்கிறது என்று கூறினார்.
"நம் அனைவரையும் அச்சுறுத்தும் பயங்கரவாத குழுக்களை எதிர்த்துப் போராட பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டணியை நம்மால் உருவாக்க முடியும்" என்று "எங்கள் சர்வதேச பங்காளிகளுக்கு நான் முன்மொழிகிறேன்" என்று மக்ரோன் விளக்கினார்.
முதலில், இது ஏற்கெனவே உள்ள, நாடுகடந்த இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான டேஷுக்கு எதிரான கூட்டணியை ஹமாஸுக்கு எதிரான போராட்டத்திற்கு நீட்டிப்பதா அல்லது, அவர் இரண்டாவது கூட்டணியை முன்மொழிகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், "டேஷுக்கு எதிரான சர்வதேச கூட்டணியின் அனுபவத்தில் இருந்து, என்னென்ன அம்சங்களைப் ஹமாஸுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டறிவதே யோசனை" என்று எலிஸி விளக்கினார்.
"இதன்பின்னர் பங்குதாரர்கள் மற்றும் குறிப்பாக இஸ்ரேல் தங்கள் தேவைகளை வெளிப்படுத்த வேண்டும்" என்று பிரெஞ்சு ஜனாதிபதி கூறினார்.
Daesh க்கு எதிரான சர்வதேச கூட்டணி, பங்கேற்பாளர்களுக்கு தரையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஆயுதப்படைகளுக்கு பயிற்சி அளிக்கவும், கூட்டுத்தாரர்களிடையே தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
மக்ரோன் தனது உரையின் போது, "அனைத்து ஜனநாயக நாடுகளின் முன்னுரிமை", "இந்த பயங்கரவாத குழுக்களை தோற்கடிப்பதே" என்று பிரகடனம் செய்தார்.இந்தப் போராட்டத்தில் "நீங்கள் தனியாக இல்லை" என்று மக்ரோன் இஸ்ரேலிய பிரதம மந்திரியிடம் கூறினார், அத்தகைய கூட்டணியை அமைப்பதற்கான தனது விருப்பத்தையும் அறிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் "இந்த பயங்கரவாத குழுக்களை எதிர்த்த போராட்டத்தில் நாம் குழப்பமடையவோ, இந்த மோதல் விரிவுபடவோ அநுமதித்து விடக்கூடாது என நான் அழுத்திக் கூற விரும்புகின்றேன்`` என்றார். அவ்வாறு இம்மோதல் பிராந்திய வடிவத்தை எடுக்குமானால் `` நாம் அனைவரும் தோல்வியுற நேரிடும்`` என எச்சரித்தார்.
பின்னர் அவர் "ஈரானிய ஆட்சி" மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளான லெபனான் ஹெஸ்பொல்லா மற்றும் "யேமனில் உள்ள ஹூதிகள்", பற்றிக் குறிப்பிடுகையில்;
`` இங்கே புதிய களமுனைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ள, அதிகம் சிரத்தை காட்டப்படாத அபாயத்துக்குள் வீழ்ந்து விடவேண்டாம்`` என அறிவுறுத்தினார்.
"பாலஸ்தீனியர்களுடனான அரசியல் செயல்முறையை" மீண்டும் தொடங்குவது அவசியம் என்று கூறிய மக்ரோன், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "பாலஸ்தீனிய கோரிக்கையை நியாயத்துடன் கேட்க வேண்டும்" என்றார்.
இதன் பொருள் `` இஸ்ரேலுடன் இணைந்து அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான, அரசுரிமையுள்ள ஆட்சிப்பரப்பைக் கொள்ளும், பாலஸ்தீனியர்களின் சட்டபூர்வ உரிமையை ஏற்றுக் கொள்வதாகும்`` என மக்ரோன் விளக்கிக் கூறினார்.
செவ்வாய்கிழமை பிற்பகல் பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை மக்ரோன் சந்திக்கவுள்ளார்.
[தொகுத்தவர் சோரன் ராடோசாவ்ல்ஜெவிக்/ஆலிஸ் டெய்லர்]
மொழிமாற்றம்: சுபாக்கிள்
☝
No comments:
Post a Comment