Monday, 21 August 2023

மாத்தளை, ரத்வத்த தொழிலாளர் குடியிருப்பு, தோட்ட நிர்வாகத்தால் தகர்ப்பு!


சுவரொட்டி புதிய ஈழப் புரட்சியாளர்கள்

மாத்தளை, ரத்வத்த குடியிருப்புகள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.

athavannews.com  by YADHUSHA 2023/08/20


மாத்தளை, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து உடைத்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வீடமைக்க தோட்ட மக்களுக்கு காணிகளை வழங்கு, 

ரத்வத்த தோட்ட நிர்வாகத்தின் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் 

என்ற தொனிப்பொருளின் கீழ், பிரதேச மக்களினால் குறித்த போராட்டம் இன்று (20-08-2023) முன்னெடுக்கப்படவுள்ளது.

ரத்வத்தை தோட்ட கீழ்பிரிவுக்குட்பட்ட பகுதியில், குறித்த குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்கள் உள்ளடங்கலாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்தின் முன்னாள் முகாமையாளரினால் இடம் வழங்கப்பட்டிருந்தாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே தற்காலிக குடியிருப்பொன்றை அமைந்துள்ளதாகவும் அவரகள் குறிப்பிட்டுள்ளனர்.


ரத்வத்த கண்டன ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து இவ்வாறு அமைக்கப்பட்ட குடியிருப்பை உடனடியாக அகற்றுமாறு தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளரினால்   அச்சுறுத்தல்  விடுக்கப்பட்ட நிலையில் நேற்று அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் எமது ஆதவன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வினவுவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் எமது ஆதவன் செய்தி பிரிவு தொடர்பு கொண்ட போதிலும் முறையான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்து விடயத்திற்கு  நாடாளுமன்ற  உறுப்பினர்  வடிவேல் சுரேஸ்  மற்றும் தழிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன்  ஆகியோர்  கண்டனம்  வெளியிட்டுள்ளதுடன்  சம்பந்தப்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக் கோரச்சம்பவம் குறித்து ’ஒருவன்’ இணையதளம் வெளியிட்ட செய்தியில், காணொளி இணைக்கப்பட்டுள்ளதுடன் அதனை வெளிக் கொணர்ந்து பரவலாக்கியது சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அச் செய்தி கூறுவதாவது;

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு

oruvan.com/sri-lanka/2023/08/20/


வீடுகளை அடித்து உடைத்த தோட்ட முகாமையாளர் (காணொளி) - கண்டனம் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம்.

ரத்வத்தை தோட்ட நிர்வாகத்தின் காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக வீடுகளை அந்த தோட்டத்தின் உதவி முகாமையாளர் அடித்து உடைக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதை கண்டிக்கும் முகமாக “வீடமைக்க தோட்ட மக்களுக்கு காணிகளை வழங்கு“ என்ற தொனிப்பொருளின் கீழ், கண்டன ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

”ரத்வத்தை தோட்ட நிர்வாகத்தின் காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தோட்ட மக்கள் மற்றும் பிரதேச வாழ் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம்

குறித்த காணொளியின் ஊடாக தோட்ட முகாமையாளரின் செயல் தற்போது மலையக மக்கள் மாத்திரமன்றி,ஏனைய மக்கள் அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது எனலாம்.

அந்தவகையில், பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் உரையாடியதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாகப் பகிரப்படுவதால் இந்த காணொளிக்கு அனைவருமே கன்டனம் தெரிவித்துவருகின்றனர்.


இந்தக் காணொளி தொடர்பாக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, சட்டரீதியான விடயங்கள் மற்றும் மேலதிக விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களது பேஸ்புக் பக்கத்தில் இக் குடியிருப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரத்வத்தை தோட்ட கீழ்பிரிவுக்குட்பட்ட பகுதியில், காணொளியில் குறிப்பிடப்பட்ட குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்கள் உள்ளடங்கலாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித் துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் இக் குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர்.

அவ்வகையில், தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர் , ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக் கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்காரணமாக குடும்பத்தினர் வாழ்வாதாரத்துக்கு தேவையான வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன், ஒரு கிழமைக்கு முன் அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மலையக மக்கள் மீதான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

காணொளி FB இணைப்புகள்

குடியிருப்பு தகர்ப்பு

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு

ஜீவன் தொண்டமான் வாக்குவாதம்

கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம்


’மலையக’ கட்சிகள் 

களத்துக்கே சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தோட்ட நிர்வாகி ஒருவருடன் கடும் வாக்குவாதம்.

நிர்வாகத்துக்கு எச்சரிக்கை.

மாத்தளை - எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ரத்வத்த தோட்டத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் உள்ளிட்ட இ.தொ.காவினர் சென்று நேரடியாக பிரச்சினைகளை ஆராய்ந்துள்ளனர்.ரத்வத்தை தோட்ட லயன் குடியிருப்பில் வசித்தவர்களுக்கு தனி வீடுகளை நிர்மாணித்து கொடுக்கவும் அமைச்சர் ஜீவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச் சாரப்பட ஒருவன் இணையதளத்தின் மற்றொரு செய்திக் குறிப்பு கூறுகின்றது.

அந்த காடையனை வெளியேற்றுங்கள்” – மனோ கடும் சீற்றம்! 

samugammedia/ image Tamil nila / Aug 20th 2023

மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் விலக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.இது தொடர்பான மனோவின் முகநூல் பதிவு வருமாறு,

“எமது பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம். முதலில் அந்த காடையனை தோட்ட நிர்வாகத்தை விட்டு விலக்குங்கள் என சற்றுமுன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவை அழைத்து கத்தினேன்.” – என்றுள்ளது.

ஊடகங்கள்:

மேலும் சில ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. பொதுவாக,

’’தோட்ட நிர்வாகம் அராஜகம்! – தற்காலிக குடியிருப்பை உடைத்தெறிந்த உதவி முகாமையாளர்’’ என்ற வகையில் அவை அமைந்திருந்தன.தமிழீழச் செய்தியகம் இதனை உடனடியாக வெளியிடத் தவறியமைக்கு வருந்துகின்றது.இச் செய்தித் தொகுப்பில் புதிய ஈழப் புரட்சியாளர்களின் சுவரொட்டியையும் இணைத்துள்ளது.


தொடரும்

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...