SHARE

Thursday, December 16, 2021

மும்மொழிப் பதாகைகளுடன் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சுகாதார உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதாரத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் இன்று (16) மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிமனை வரை சென்றது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள், தொழில்நுட்ப ஆய்வுகூட பரிசோதகர்கள் உட்பட சுகாதாரத்துறை சார்ந்த பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பெருமளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தனர்.

(மட்டக்களப்பு குறூப் நிருபர்- ரீ.எல்.ஜவ்பர்கான் )

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...