Saturday 20 November 2021

கனடாவில் சுமந்திரனுக்கு `தனி மரியாதை`!

 பொலிஸ் பாதுகாப்புடன் தப்பியோட்டம்!!


நேற்று மாலை(20) கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.  எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது பங்கெடுத்திருந்த பலரும் பேச்சைத் தொடரவிடாமல்  உரத்த குரலில் கேள்வி எழுப்பத்தொடங்கினார்கள்.  

கூட்டத்தில்; பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். 



அவையோர் எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது. இருந்தும் அவற்றைச் செவிமடுக்காது தொடர்ந்து சுமந்திரனை பேச விடாது கூட்டத்தைக் குழப்பினார்கள். இதனால் கூட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத்  தள்ளப்பட்டோம். இப்படி நடப்பது இதுவே முதல் தடவை ஆகுமென கனடா தமிழரசு முக்கியஸ்தர் கவலை வெளியிட்டுள்ளார். 

கூட்டம் தொடங்கு முன்னர் சிலர் மண்டபத்துக்கு எதிர்ப்புறமாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

கனடா நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. கனடா ஒரு சனநாயக நாடு என்ற முறையில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட சட்டம் அனுமதிக்கிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தினுள் எம்.ஏ.சுமந்திரன் பேச தொடங்கிய போதே கேள்விகளால் துளைத்தெடுத்தனர் செயற்பாட்டாளர்கள்.

இந்நிலையில் கனேடிய காவல்துறை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அணியினர். 

அதிக நேரம் சுமார் 100 வரையான தமிழ் இன உணர்வாளர்கள் மண்டபத்துக்கு வழியே பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அதே வேளை மண்டபத்துக்கு உள்ளேயும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர்.
(பதிவு இணையம்)

இலங்கை அரசின் ஏற்பாட்டில் கனடாவில் ஈழத்தமிழர்களிற்கு முக்கிய கூட்டம்

இலங்கை புலனாய்வு துறையின் வெளிநாட்டு முகவராகச் செயற்படும் ஊடகவியலாளர் DBS ஜெயராஜ் ஏற்பாட்டில் கனடா நக்கீரன் தலைமையில் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பங்கு பற்றும் கூட்டம்  20ம் திகதி நடை பெற உள்ளது.

DBS ஜெயராஜின் மச்சான் முறையானவரே சுமந்திரன்,  விடுதலைப்புலிகளிற்கு எதிராக செயற்படுவதுடன் தமிழ் தேசியக் கருத்தக்களிற்கு எதிராக ஆங்கில ஊடகங்களில் பல கட்டுரைகளை எழுதுவதால் இலங்கை அரசின் உளவுப் பிரிவின் முக்கியஸ்தர் வேணாட் குணத்திலகவுடன் நெருங்கிய நட்பைப் பேனும் ஒருவர்.

இப்படியான சூழலில் தற்போது இலங்கை அரசாங்கம், ஈழத்தமிழர்களின் சிந்தனையை திசைதிருப்புவதற்கு DBS ஜெயராஜ் போன்றவர்களை பயன்படுத்துகிறது.

அதன் ஓர் அங்கமாகவே கனடாவில் உள்ள இலங்கைத் துாதரகத்தின் செலவில் இன் நிகழ்விற்கான ஏற்பாட்டை DBS ஜெயராஜ் கனடா ஸ்காபரோவில் அமைத்துக் கொடுத்துள்ளார்.

சனிக்கிழமை (20/11) நடக்கவுள்ள கூட்டத்தில் சாணக்கியன் மற்றும் சுமந்திரனுடன் புகைப்படம் எடுப்பதற்றாக சில தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தான் பெரும் வேதனைக்குரிய விடையம்.

சுமந்திரன் – சாணக்கியன் இந்த கனடா கூட்டம் முடிந்தவுடன் கனடாவில் இருந்து சுவிட்சர்லாந்து பயணமாகி ஜெனிவாவில் தனிப்பட்ட சிலரைச் சந்தித்த விட்டு அங்கிருந்து  லண்டன் பயணமாகி அங்கும் சில தனிப்பட்ட கூட்டம் நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிதரனின் தயவில் பாராளுமன்றம் சென்ற சுமந்திரன் தமிழர்களது பிரதி நிதி அல்ல என்பதனை முதலில் தமிழர்கள் மேற்கு உலகத்திற்கு புரியவைக்க வேண்டும் அதைப் பற்றி புலம் பெயர் தமிழர்கள் சிந்திப்பது காலத்தின் கட்டாயம்........

உங்களின் செயற்பாட்டை  ஈழத் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மிக அவதானத்துடன் எதிர்பார்ப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இப்படியான கூட்டங்களை நடத்தி, அமெரிக்க அரசு மற்றும் பிரித்தானிய அரசுக்கு தாம் தமிழர்களின் பிரதிநிதி என்று கூற முற்படுகிறார் சுமந்திரன்.

இந்த பின் வாசல் சுமந்திரனை இப்படியே விட்டால், மேலும் பல அழிவுகளை தமிழர்கள் சந்திக்க நேரிடும் மக்களே அவதானம்.

No comments:

Post a Comment

ANDREW NEIL-டிரம்பின் வெடிகக்கும் `குற்றவாளி தீர்ப்பின்` உடனடிப் பகுப்பாய்வு

Doctoring corporate book-keeping entries under New York law is only a misdemeanor or minor crime, usually involving just a slap on the wrist...