SHARE

Sunday, October 17, 2021

கடல் வழியாக முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை மீனவர்கள் போராட்டம்..

 


வீடியோ

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.

இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தத்தின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மீனவ சங்கங்களும், வெகுஜன அமைப்புக்களும் இக் கடல் வழி கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பட்டு செய்திருந்தனர்.

``எங்கள் கடல்  எமக்கு வேண்டும்``, ``தடை செய், தடை செய் இழுவைப் படகைத் தடை செய்``, ``அழிக்காதே அழிக்காதே , எம் கடல் வளத்தை அழிக்காதே`` என மக்கள் முழக்கமிட்டனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...