SHARE

Monday, September 07, 2020

தியாகிகள் தின கழக முன்னணி அறைகூவல்கள்.

 

செப்டம்பர் 12 - தியாகிகள் தினம்!
தோழர் அப்பு-பாலன் நினைவு நாள்!
பாசிச எதிர்ப்பு நாள்!!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துவதால் வரும் எதிர்ப்புகளை சாதி, மத, இன வெறி அடிப்படையில் பிளவுபடுத்தி மோதவிடும் பாசிச மோடி கும்பலை தூக்கியெறிவோம்!
* அமெரிக்க-நேட்டோ, சீன-ரசிய ஏகாதிபத்திய முகாம்களின் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போரில் அமெரிக்காவின் தெற்காசிய அடியாள் படையாக இந்தியாவை மாற்றும் இந்தோ-பசிபிக் இராணுவ, பொருளாதார கூட்டமைப்பு - ‘குவாட்’ கூட்டமைப்பிலிருந்து வெளியேறு!
* இந்தியாவின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாததற்கும் காரணம் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளே!
    o உலக வர்த்தக கழகம், ஐ.எம்.எப் உள்ளிட்ட அனைத்து 
       புதிய காலனிய நிறுவனங்களிலிருந்தும் வெளியேறு!
* மக்களின் சொத்துகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதும், 20 லட்சம் கோடி ஒதுக்குவதும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கல்ல! பொது சொத்துகள் அனைத்தையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவே!
* இந்தியாவின் வளங்கள் அனைத்தையும் கட்டற்ற முறையில் ஏகாதிபத்தியங்கள் சூறையாட அனுமதிக்கும் பாசிச சுற்றுச் சூழல் சட்ட வரைவைத் திரும்பப் பெறு!
* புதிய காலனிய வேளாண் சட்டங்களின் மூலம் வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காதே! விவசாயிகளை மேலும் தற்கொலைக்குத் தள்ளாதே!
* உள்ளத்தால் இந்துத்துவ பாசிசத்திற்கும், உடலால் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்யும் விதேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறும் வரை போராடுவோம்!

* தமிழகம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் - சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
       o ஆங்கிலம்-இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்தை 
          எதிர்ப்போம்! தாய்மொழிக் கல்வி - ஒரு மொழிக் 
           கொள்கைக்காகப் போராடுவோம்!!
* இந்துத்துவ பாசிச மோடி கும்பலின் எடுபிடி எடப்பாடி ஆட்சியை அகற்றுவோம்!
* சாதி ஆணவப் படுகொலையையும், சாதி ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
      o புதிய காலனிய - தரகு முதலாளித்துவ - நிலவுடமை 
         உற்பத்தி முறையை புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் 
         தகர்த்து சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் 
         படைப்போம்!
* பார்ப்பனிய பாசிசம் - கார்ப்பரேட் காவி பாசிசம் எனும் பெயர்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பை நீர்த்துபோகச் செய்து, காங்கிரசு - திமுக கும்பலுக்கு முட்டு கொடுக்கும் வலது விலகல் போக்குகளை முறியடிப்போம்!
* பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அரசு என்பது தொழிலாளர்-விவசாயிகள் அரசே!
        o அமெரிக்காவின் புதியகாலனிய நலன்களுக்கு 
           சேவை செய்யும் மோடி கும்பலின் பாசிச ஆட்சியை 
            வீழ்த்தி மக்கள் ஜனநாயக குடியரசமைப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் 

இந்தியத் துணைக் கண்டத்தை அழுத்திக் கொண்டிருக்கும் நான்கு மலைகளான அமெரிக்க ஏகாதிபத்தியம்,ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம்,தரகு முதலாளித்துவம்,நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றைத் தூக்கியெறிந்து இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்திற்காகப் போராடி ஆளும் வர்க்க ஆட்சியாளர்களின் பாசிசக் காட்டுத்தர்பாருக்கு பலியான பெயர் தெரிந்த பெயர் தெரியாத அனைத்து வீரத்தியாகிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நாளே செப்டம்பர்-12-தியாகிகள் நினைவு நாள்!புரட்சித் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி,தற்போதைய சூழலில் உலக மேலாதிக்கத் திற்காகவும் புதியகாலனி ஆதிக்கத்திற்காகவும் போட்டியிடும் உலக மக்களின்  ஒட்டுமொத்த எதிரிகளான அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சீன ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய தாசன் மோடி கும்பலின் கார்ப்பரேட்,காவிப்பாசித்தை எதிர்த்து வீழ்த்த தியாகிகளின் பெயரால் சூளுரைப்போம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...