Friday, 11 December 2020

சென்னைபஞ்சாப்பில் இருந்து 1,200 டிராக்டர்களில் மேலும் 50,000 விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டனர்:

 


போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை: 

இன்று முதல் சுங்கச் சாவடிகள் முற்றுகை

தினகரன்  2020-12-12 

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் 16வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 டிராக்டர்களில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.  மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு 16வது நாளாக நேற்றும் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். மத்திய அரசு நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்த நிலையில், இனி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என விவசாயிகள் திட்டவட்டமாக கூறி உள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறெந்த நிபந்தனையையும் ஏற்கப் போவதில்லை என்ற உறுதியுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய தயாராக உள்ளதே தவிர, எக்காரணம் கொண்டும் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தமுடிவு செய்துள்ளனர்.

டெல்லிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் முடக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் கரங்களை பலப்படுத்தும் வகையில் பஞ்சாப்பின் பெரோசிபூர், பெசில்கா, அபோகர் பரித்கோட் மற்றும் மோகா ஆகிய பகுதிகளில் இருந்து மேலும் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். இது குறித்து மஸ்தூர் சங்கராஸ் கமிட்டி என்ற விவசாய அமைப்பின் தலைவர் சத்னம் சிங் கூறுகையில், ‘‘இனி எங்கள் போராட்டம் சாகும் வரை நடக்கும். எந்த சூழலிலும் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம். எங்களுக்கு ஆதரவாக 1200 டிராக்டர்களில் மேலும் 50 ஆயிரம்  விவசாயிகள் பஞ்சாப்பில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (இன்று) டெல்லி சிங்கு எல்லையை வந்தடைவார்கள்,’’ என்றார்.

ஏற்கனவே அறிவித்தபடி, விவசாயிகள் இன்று நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை முடக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், ‘‘மோடி அரசையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் எதிர்த்து இன்று சுங்கச்சாவடிகளை முடக்கும் போராட்டத்தை நடத்துவோம். அதைத் தொடர்ந்து வரும் 14ம் தேதி அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும்,’’ என்றார். விவசாயிகள் மேலும் அதிகளவில் கூடுவதால் மத்திய அரசும் பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக விரோதிகளை அனுமதிக்காதீர்கள்

டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினர், பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் கைதானவர்களை விடுவிக்க கோரி கோஷமிடுவதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை தனது டிவிட்டரில் பதிவிட்ட மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘‘விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். எனவே விவசாய நண்பர்களே விழிப்புடன் இருங்கள். உங்கள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள்’’ என கூறி உள்ளார்.

நாடு முழுக்க பாஜ ஆதரவு பிரசாரம்

விவசாயிகள் போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுக்க பாஜ திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 700 மாவட்ட கிராமங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் நடத்திய விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் பாரத் கிசான் வழக்கு

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாய சங்கங்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘பாரத் கிசான் சங்கம்,’ உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘வேளாண் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி மாற்று சந்தைகள் உருவாக்கப்பட்டால், அது விவசாய துறைகளை கண்டிப்பாக முழுமையாக சிதைத்து விடும். அதனால், இச்சட்டத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tuesday, 8 December 2020

அகில இந்திய விவசாயிகள் பொது முடக்கத்தை ஆதரித்து கழகம் மறியல் போராட்டம்!

 மக்கள் ஜனநாய இளைஞர் கழகம் தருமபுரியில் விவசாயிகளின் அகில இந்திய பந்த-ஐ ஆதரித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்காக போராடியவர்கள் மீது அடக்குமுறையை தமிழகம் முழுவதும் மோடியின் எடுபிடி எடப்பாடி அரசு தொடுத்துள்ளது. இந்த அடக்குமுறையை மஜஇக வன்மையாக கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் இந்த மத்திய, மாநில அரசுகள் ஆட்சியிலிருக்க தகுதியில்லாத அரசுகள். இந்த மக்கள் விரோத அரசை தூக்கியெறிய அனைவரும் கிளர்ந்தெழ வேண்டும் என மஜஇக அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.







Monday, 19 October 2020

மலையக முரளியின் கிரிக்கெற் உலக சாதனை திரைப்படத்தை முடக்கிய தமிழக இனமான ஈழத் துரோகிகள்!



``தமிழகத்தின் தலை சிறந்த திரைப்படக் கலைஞனின் கலைப் பயணத்துக்கு என்னால் தீங்கு நேர்ந்து விடக்கூடாது, தயவு செய்து 800 இலிருந்து விலகுங்கள்``
முரளி (!9-10-2020)

``நன்றி வணக்கம்``.
சேதுபதி.(!9-10-2020)







Thursday, 1 October 2020

இந்திய விவசாய கிளர்ச்சி ஆர்ப்பாட்டம் வெல்க!


செப்டம்பர் 25 அகில இந்திய விவசாயிகள் போராட்டம் வெல்க!

* உற்பத்தி முதல் விலை நிர்ணயம் வரை அனைத்தையும் ஏகாதிபத்தியங்களுக்கும் - அம்பானி, அதானி கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்கும் வேளாண் மசோதாக்களை முறியடிப்போம்!
* புதிய காலனிய வேளாண் மசோதாக்களை பாசிச முறையில் நிறைவேற்றிய அமெரிக்க அடிவருடி மோடி கும்பலை கருவறுப்போம்!
* உணவு தானிய கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் பொது விநியோக திட்டத்திற்கு மூடு விழா நடத்தும் வேளாண் மசோதாக்களை கிழித்தெறிவோம்!



* விவசாயத்துறை மீதான மாநில உரிமைகளை பறிக்கின்ற, விவசாயத்தையும் விவசாயிகளையும் முற்றாக அழிக்கின்ற சட்டங்களை ஆதரிக்கும் எடப்பாடி கும்பலே! ஆட்சியை விட்டு வெளியேறு!!
* விவசாயத்தை கார்ப்பரேட்மயம் - தாராளமயம் - வணிகமயமாக்கும் உலக வர்த்தக கழகம் உள்ளிட்ட புதிய காலனிய நிறுவனங்களிலிருந்து வெளியேறு!
* வேளாண்மையை வணிகமயம் - தாராளமயமாக்கி 5 லட்சம் விவசாயிகளை படுகொலை செய்த துரோகத்தை துவக்கி வைத்த காங்கிரசு கும்பலின் நாடகங்களை அம்பலப்படுத்துவோம்!
* சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கார்ப்பரேட்டுகள், பெரும் நிலவுடமையாளர்கள் - கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் தேசவுடமையாக்க புதிய ஜனநாயக விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* விவசாயிகள் போராட்டத்தை, (புதிய ஜனநாயக அரசியல்)* கிளர்ச்சிப் போராட்டங்களாக வளர்த்தெடுப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Monday, 7 September 2020

தியாகிகள் தின கழக முன்னணி அறைகூவல்கள்.

 

செப்டம்பர் 12 - தியாகிகள் தினம்!
தோழர் அப்பு-பாலன் நினைவு நாள்!
பாசிச எதிர்ப்பு நாள்!!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துவதால் வரும் எதிர்ப்புகளை சாதி, மத, இன வெறி அடிப்படையில் பிளவுபடுத்தி மோதவிடும் பாசிச மோடி கும்பலை தூக்கியெறிவோம்!
* அமெரிக்க-நேட்டோ, சீன-ரசிய ஏகாதிபத்திய முகாம்களின் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போரில் அமெரிக்காவின் தெற்காசிய அடியாள் படையாக இந்தியாவை மாற்றும் இந்தோ-பசிபிக் இராணுவ, பொருளாதார கூட்டமைப்பு - ‘குவாட்’ கூட்டமைப்பிலிருந்து வெளியேறு!
* இந்தியாவின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாததற்கும் காரணம் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளே!
    o உலக வர்த்தக கழகம், ஐ.எம்.எப் உள்ளிட்ட அனைத்து 
       புதிய காலனிய நிறுவனங்களிலிருந்தும் வெளியேறு!
* மக்களின் சொத்துகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதும், 20 லட்சம் கோடி ஒதுக்குவதும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கல்ல! பொது சொத்துகள் அனைத்தையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவே!
* இந்தியாவின் வளங்கள் அனைத்தையும் கட்டற்ற முறையில் ஏகாதிபத்தியங்கள் சூறையாட அனுமதிக்கும் பாசிச சுற்றுச் சூழல் சட்ட வரைவைத் திரும்பப் பெறு!
* புதிய காலனிய வேளாண் சட்டங்களின் மூலம் வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காதே! விவசாயிகளை மேலும் தற்கொலைக்குத் தள்ளாதே!
* உள்ளத்தால் இந்துத்துவ பாசிசத்திற்கும், உடலால் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்யும் விதேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறும் வரை போராடுவோம்!

* தமிழகம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் - சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
       o ஆங்கிலம்-இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்தை 
          எதிர்ப்போம்! தாய்மொழிக் கல்வி - ஒரு மொழிக் 
           கொள்கைக்காகப் போராடுவோம்!!
* இந்துத்துவ பாசிச மோடி கும்பலின் எடுபிடி எடப்பாடி ஆட்சியை அகற்றுவோம்!
* சாதி ஆணவப் படுகொலையையும், சாதி ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
      o புதிய காலனிய - தரகு முதலாளித்துவ - நிலவுடமை 
         உற்பத்தி முறையை புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் 
         தகர்த்து சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் 
         படைப்போம்!
* பார்ப்பனிய பாசிசம் - கார்ப்பரேட் காவி பாசிசம் எனும் பெயர்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பை நீர்த்துபோகச் செய்து, காங்கிரசு - திமுக கும்பலுக்கு முட்டு கொடுக்கும் வலது விலகல் போக்குகளை முறியடிப்போம்!
* பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அரசு என்பது தொழிலாளர்-விவசாயிகள் அரசே!
        o அமெரிக்காவின் புதியகாலனிய நலன்களுக்கு 
           சேவை செய்யும் மோடி கும்பலின் பாசிச ஆட்சியை 
            வீழ்த்தி மக்கள் ஜனநாயக குடியரசமைப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் 

அவர்கள் இருக்கிறார்களா..? இல்லையா..?

 


Thursday, 23 July 2020

எடப்பாடி அரசே, தர்மபுரி ஆதிக்க சாதி வெறியன் ராஜசேகரனை தண்டி!

 
எடப்பாடி அரசே! தருமபுரி-பெண்ணாகரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர் அறிவரசனை மலம் அள்ள வைத்த ஆதிக்க சாதி வெறியன் ராஜசேகரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கு!
 ராஜசேகரனின் ஆதிக்க சாதி வெறிக்கு துணை போகும் பெண்ணாகரம் காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கு!

 அறிவரசன் குடும்பத்தார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறு!
 சாதி, மத, இனவெறி பாசிசம் தீவிரம் பெறக் காரணம் ஏகாதிபத்திய நிதி மூலதன நெருக்கடியே !

 நாடெங்கும் பெருகிவரும் சாதி - தீண்டாமை வன்கொடுமைகள், சாதி ஆணவப் படுகொலைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுவோம்!
 சாதியின் அடித்தளமான அரைநிலைவுடமை உற்பத்தி முறையையும் அதை பாதுகாக்கும் புதிய காலனியத்தையும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தகர்த்தெறிவோம்!

Wednesday, 22 July 2020

கதவைத் தட்டுகிறது அடுத்த `கறுப்பு ஜூலை`

கதவைத் தட்டுகிறது அடுத்த `கறுப்பு ஜூலை`
காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!


அன்பார்ந்த ஈழ தேச மக்களே,

கறுப்பு ஜூலையின் 37வது நினைவாண்டு இன்று, ஜூலை 23, 2020ஆகும்.
இலங்கையின் கறுப்புச் சுதந்திர பாராளமன்றத்தின் 16 வது பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 5 ஆகும்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் தனி அம்சங்களையும், அவற்றின் பொது இணைப்பையும், இது நிறைவேறும் குறிப்பான சர்வதேசச் சூழ்நிலையையும் ஆய்ந்தறிந்து, கறுப்பு ஜூலை 37 ஆம் ஆண்டுநினைவாக, ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஈழதேச மக்கள் எடுக்க வேண்டிய நிலை என்ன என்பதை கண்டறிவது இத் தொடர் கட்டுரையின்  குறிக்கோள் ஆகும்.

பாகம் (1)

கறுப்பு ஜூலை 1983

எழுபதுகளில் தோன்றிய பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்,சிங்களத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர் தாயகமான தமிழீழ தேசத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.இதன் பொருட்டு தம் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை விரட்டியடிக்கும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. 1983ம் ஆண்டு யூலை மாதம் 23 ம்தேதி யாழ்ப்பாணம் பலாலி இராணுவத்தளத்தில் இருந்து வந்த சிங்களப் படையின் வாகனத் தொடர் அணி மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 13 சிங்கள படையினர் பலியாகினர்.இதை ஒரு பொறியாகவைத்து மூட்டப்பட்ட நாடு தழுவிய  தீ தான் கறுப்பு ஜூலை 1983.

இதை விசமத்தனமாக `கலவரம்-Riots' என பொதுவாக கூறி வருகின்றனர். கறுப்பு ஜூலை 1983, இரண்டு சமூகங்களுக்கிடையே தோன்றிய தற்காலிக வன்முறை மோதல் அல்ல.இது அரசதிகாரத்தின்

துணையுடன்,படை பலத்துடன்,பெரும்பான்மையான சிங்கள மக்களை; அவர்களது பகுதியில் சிறுபான்மையினராக வாழும், ,வட கிழக்குத் தமிழர்,மலையகத் தமிழர், இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவி கட்டவிழ்க்கப்பட்ட இனவெறிப் படுகொலைத் தாண்டவம் ஆகும்.மேலும் ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான ஏதோ ஒரு அதிகாரம் ஏவி விடுகின்ற கண் மூடித்தனமான அராஜக வன்முறை அல்ல,கறுப்பு ஜூலையில் நிகழ்ந்தது.``கலகக் காரர்கள்`` வாக்காளர் பட்டியலை வைத்து, தமது இலக்கைத் தேர்ந்து கொண்டார்கள்.வர்த்தக இருப்புக்களைக் கண்டறிந்தார்கள்.வாழ் நாள் தேட்டத்தை தீ மூட்டி அழித்தார்கள். பொலிசார் எண்ணெய் எடுத்துக் கொடுத்தார்கள், படை வீரர்கள் காவல் காத்தனர் ``கலகக் காரர்களை``! தமிழரின் தனிச் சொத்துரிமை மீதான இந்தத் தாக்குதலுக்கு தரகு முதலாளித்துவ வர்க்கம் கூட தப்பவில்லை.இவை அனைத்தும் அரசதிகாரத்தின் துணையில் ஏவப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் ``கலவரம்`` என்றழைக்கப்படுகின்ற எந்த ஒரு நிகழ்வும், ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான கண் மூடித்தனமான அராஜக வன்முறை கொண்ட தன்னியல்பான சமூக
மோதலாக ஒரு போதும் இருந்ததில்லை.இவை அனைத்தும் ஆளும் வர்க்கம், அரசதிகாரம், படைபலம் கொண்டு தெளிவான திட்டத்தோடு தூண்டிவிட்டு ஏவப்பட்ட இனப்பகைமை ஆயுதமாகவே இருந்துள்ளன``.

இது சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை அசுரக்கரங்களில் ஒரு கரமாக -பிரிக்க முடியாத அங்கமாக இன்றும் இருந்து வருகின்றது.என்றும் இருந்துவரும்.

`நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை` என்கிறோமே, அதுபோல  இந்த ஆயுதம் ஆங்கிலேய காலனிய ஆட்சிமுறையில் இருந்து கற்று, சிங்களம் சுதந்திரமாக கடன் வாங்கிக் கொண்டதாகும்.

1915 இலேயே இது இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவப்பட்டது.இதை நமது ``சேர்`` ( பொன்னம்பலம்,இராமநாதன்) தலைவர்களும் இணைந்தே செய்தார்கள். பின்னால் இந்த தமிழ்-சிங்கள ஏகாதிபத்திய தாச

தரகர்கள் சுதந்திர புருசர்கள் ஆனார்களே 1948 இல்!, அதற்குப் பின்னால் இது தமிழ்த் தரகர்களுக்கு எதிராக திரும்பியது.

1949 இன் வாக்குரிமைப் பறிப்பில் ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களின் ஒரு பிரிவு துரோக நிலையையும், மறு பிரிவு சந்தர்ப்பவாத நிலையையும் எடுத்தது. இதன் விளைவாக சிங்களம் திடப்பட்டது.

1915 இலும் 1949 இலும் நமது தமிழ்த் தலைவர்கள் (ஏகாதிபத்திய தாச சமரசவாத தமிழ்த் தரகர்கள்), எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஈழ விடுதலைப் புரட்சியின் மீது விழுந்த முதலாவது வரலாற்றுப் பழியாகும்.

ஈழ தேசிய ஒற்றுமையை வேரறுக்கும் இப்பழியை இவர்கள் திட்டமிட்டே செய்தார்கள்
.

இவ்வாறான துரோகப் பாத்திரத்தால் திடம் கொண்ட சிங்களம் 1972 இல் ரொட்ஸ்கிய கம்யூனிச விரோதிகளோடு கூட்டமைத்து பெளத்த சிங்கள அரசியல் யாப்பை உருவாக்கியது.இது SLFP சிறீமா அரசாங்கத்தில் நிறைவேறியது.(இது தான் சீன ஏகாதிபத்திய தாச, செந்தில், சிவசேகரம் கும்பல் தேங்காய் உடைக்கும் `தேசிய முதலாளித்துவக் கட்சி`!)

இந்த அரசியல் யாப்பு ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களாலும் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. S.J.V செல்வநாயகம் பதவி விலகினார்.

இது வெறும் உள் நாட்டு நிகழ்வு மட்டுமல்ல, எழுபதுகளில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியும் சார்ந்ததாகும்.

இதனால் மிகவும் நலிந்து போன தமிழ்க் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்து தான் தனி நாட்டுக்கோரிக்கை தர்க்க ரீதியாக, நீதியாக முதலில் எழுந்தது.

தமிழீழக் கோரிக்கை ``தந்தை செல்வாவால்`` முன் வைக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பொய் ஆகும்.

அதற்கு முன்னரே தமிழீழ விடுதலை இயக்கம் தோன்றி விட்டது. சிவ.ஜோதிலிங்க செம்பாட்டான்கள் இதைக் கண்ணாரக் கண்டும் அதிகார பூர்வ `அரசியல் ஆய்வாளர்` என்கிற மகுடத்துக்காக பொய்
சொல்லுகின்றனர்.இவ்வாறான பொய்வாளர்களின், பொய் வாழர்களின் பட்டியல் மெய்யாகவே மிக மிக நீளமானது. நிலாந்தரமானது!

இந்த நெருக்கடியில் இருந்து மீள, தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் தவிர்க்க இயலாமல், தம்மை தக்க வைத்துக் கொள்ள கண்டடைந்த சமரச வழிதான் 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

1915 இல் கலவரம், 1958 இல் கலவரம். 1961 இல் கலவரம், 1977 இல் கலவரம்,1981 இல் மாவட்ட அபிவிருத்திசபை பலிக்களம்,  1983 இல் இனப்படுகொலைக் ``கலவரம்``. இவ்வாறு 68 ஆண்டுகள் அரசியல் அமைப்புச்சட்டம் என்ன சொன்னாலும் இந்த கலவர ஆயுதத்தால் தான் நாடு ஆளப்பட்டு வந்திருக்கின்றது.

மூச்சு விட மக்களுக்கு தேசம் இருந்ததென்றால் அது இந்தப் ``பாசிசப் பிராபகரனின்`` முப்பது ஆண்டுகள் மட்டும் தான்.


முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கைச் சோனகர்களுக்கு எதிராக கலவர ஆயுதத்தை ஏவினர்.

ஒரு ஞாயிறு தினத்தில் சடுதியாக சஹாரான் என்கிற பயங்கரவாதி உயிர்த்தது, அது உலகளவில் பிரபல்யமாகியது, கலவர ஆயுதம் கைவிடப்படவில்லை என்பதற்கான ஆதாரமாகும்.

எவ்வாறு எண்பத்தி மூன்று ஜூலை கலவரக் கிளர்ச்சிக்கு டட்லியில் இருந்து ஜே.ஆர் வரை ஒரு 35 ஆண்டுகால பிரச்சார இயக்கம் இருந்ததோ, அதேபோல 2009 இற்குப் பின்னாலும் ஒரு பிரச்சார இயக்கம் ஆரம்பித்தாகிவிட்டது.பிக்கு வர்க்கத்தை ஆதார சமூக சக்தியாகக் கொண்ட இந்த வரலாற்று இயக்கத்தின் ஒரே குறிக்கோள் , ``ஏக்க ரட்டே`` சிங்கள அரசு, சிங்கள நாடு என்பதேயாகும்.

1983 இற்குப் பின்னால் 2009 வரை ``சிங்கள தமிழ்க் கலவரம்`` நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், தளபதி பிரபாகரனின் விடுதலைப் புலிப்படை காப்பரணாக இருந்ததே!

துடைத் தொழித்து விட்டார்கள் துரோகிகள்!

நிராயுத பாணியாக நிற்கிறது ஈழ தேசம்!

பக்ச பாசிசம் அரங்கேற, நாடாள மன்ற ஜனநாயகம் ஏணிப்படியாய் நிற்கின்றது.(நீதியரசரே இதை ஏற்றுக் கொள்கின்றார்!)

மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பக்ச பாசிசம் உலக மறுபங்கீட்டு போர் உக்கிரமடையும் காலத்தில் ஆட்சி செலுத்தப் போகின்றது!

அடுத்த கறுப்பு ஜூலை கதவைத் தட்டுகின்றது.
காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!

(தொடரும்)

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...