Friday, 14 December 2018

காங்கிரசும், பா.ஜ.க வும் இந்தியப் பாசிசத்தின் இருமுகங்கள்.



பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்கதளம், சிவசேனை ஆகிய இந்து மதவெறி பாசிச அமைப்புகள் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதியைத் திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்து தரை மட்டமாக்கினர். இக்கோரச் சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவில் தலையெடுத்தாடும் இருதலைப் பாசிசப் பாம்பான பா.ஜ.க, காங்கிரஸ் எதிரிகளை எதிர்த்து,தேசிய முன்னணி, இடது சாரி முன்னணி,மற்றும் மாநில
சமரச சக்திகளைத் தனிமைப்படுத்தி, இந்து பாசிச அரசியலை எதிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்போர் அனைவரையும் ஓர் அணியில் திரட்டுவதற்கான அரசியல் செயல் தந்திர பாதை என்கிற முறையில் `காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்`.எனும் நூல் மார்ச் 1993 இல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டு, பாசிச எதிர்ப்பு ஜனநாயகப் பிரச்சார இயக்கம்
முன்னெடுக்கப்பட்டது.

அப்பிரசுரத்தை 2013 அக்ரோபரில் இணைய பதிப்பாக வாசகர்களுக்கு சமர்ப்பித்திருந்தோம்.

முதல் பிரசுரம் வெளிவந்த இந்தக் கால் நூற்றாண்டில் சர்வதேசச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.ஏகாதிபத்திய நெருக்கடியும் பாசிச வளர்ச்சியும் பன்மடங்கு மேலோங்கியுள்ளன. இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டு உலக மறுபங்கீட்டின் யுத்ததந்திரக் கூட்டாக வளர்ந்துவிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகள் மாறிவிட்டன.எனினும் இவையெதுவும் அரசியல் செயல்தந்திர வழியின் பொதுத் திசையை*  எவ்விதத்திலும் மாற்றவில்லை.அதன் சரியான தன்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியப் பாசிசம், உலகு தழுவிய பாசிசத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சூழலில் இப்பிரசுரம் இன்னும் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகிவிட்டது.

இந்தியப் பாசிசத்தை பா.ஜ.க வின் இந்துத்துவா (Hindutuva) என்பதாக
மட்டும் குறுக்கி காங்கிரஸுடன் கூட்டமைத்து `பாசிசத்தை ஒழிக்கப் போவதாக` திருத்தல்வாதிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற சந்தர்ப்பவாதிகள் தேர்தல் கூட்டுக்கள் அமைக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களோடு கூடவே தமிழக இனமானக் கும்பல்களும் ராஜபக்சவின் ஈழ இனப்படுகொலைக்கு முதுகெலும்பாக இருந்த-இருக்கின்ற-இருக்கப் போகின்ற காங்கிரஸோடு -சனாதன எதிர்ப்பு-கூட்டமைக்கின்றனர்.

இச்சூழலில் `காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்' காட்டுகின்ற செயல்தத்திர வழி இந்தியாவில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை பாட்டாளிவர்க்கத் தலைமையில் கட்டமைப்பதற்கான நெறிகளை வகுத்தளித்திருக்கின்றது.

இதனால் இதனைப் பரந்து பட்ட மக்கள் இடையே எடுத்து விளக்கி பிரச்சாரம் செய்வது இன்று அவசர அவசியமாயுள்ளது.


இந்நூலின் ஆசான் போல்சுவிக் புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே இன்று நம்முடன் இல்லை. இம் மூன்றாவது இணைய பதிப்பை அவருக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.

சமரன் (ப-ர்/14-12-2018)

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...