SHARE

Monday, April 09, 2018

ஐபிஎல் 2018 : சென்னை


தமிழகம் எங்கும் காவிரி ஆணையம் அமைக்கக் கோரி, விவசாய இயக்கம் கொழுந்து விட்டு எரியும் சூழலில், ஐபிஎல் 2018 திட்டமிட்டபடி  சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு துரோகம் இழைத்த மோடி அரசையும், அதன் தமிழக எடுபிடி எடப்பாடி நிர்வாகத்தையும் எதிர்த்துப் போராடும் மக்கள் இவ் விழாவை நடத்தக்கூடாது எனக் கோரி வருகின்றனர். ENB Tenn

=============================

ஐபிஎல் 2018 : சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு
By Saro - March 30, 2018

11 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7 ம் தேதி முதல் மே 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது.ஐபிஎல் தொடக்க நாளான ஏப்ரல் 7 ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் உடன் விளையாட உள்ளது.இந்த ஆட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7  ஆட்டங்களில் விளையாட உள்ளது.முதல் ஆட்டம் ஏப்ரல் 10 ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் நடைபெற உள்ளது.இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விலை வெளியாகி உள்ளது.குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.1,300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 (பெவிலியன் டெரஸ்) ஆகும். மேலும் ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனிலும்,ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும் பெறலாம்.

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...