கிழக்கில்
வடக்கில்
ஈழத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்
Tuesday, November 28, 2017 - 06:00 தினகரன்
வடக்கு, கிழக்கெங்கும் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு
வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் நேற்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், உயிரிழந்த உறவுகளை நினைத்து பலரும் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியமை உருக்கமான காட்சியாக அமைந்திருந்தது.
மாவீரர் வாரத்தின் இறுதிநாளான நேற்று (27) மாலை 6.05 மணிக்கு சகல துயிலும் இல்லங்களிலும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன.
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்கள், யாழ் கோப்பாய் மற்றும் உடுத்துறை துயிலும் இல்லங்கள், முல்லைத்தீவு தேராவில், முள்ளியவளை, இரணைப்பாலை உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களிலும், மன்னாரில் ஆட்காட்டி, பண்டிவி ரிச்சான் துயிலும் இல்லங்களிலும், வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்திலும், கிழக்கின் வாகரை கண்டலடி துயிலும் இல்லம், திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லம், அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டன.
முன்னதாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் காலை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த நிலையில், நினைவுத்தூபியை சுற்றி மஞ்சள், சிவப்புநிற கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாழ் குடாநாட்டில் பெய்துவரும் மழையையும் பொருட்படுத்தாது பல்கலைக்கழக மாணவர்களும், பல்கலைக்கழக பணியாளர்களும் நினைவுத் தூபிக்கு வரிசையில் நின்று மலரஞ்சலி செலுத்தினர்.
அதேநேரம், வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதிக்கு அருகில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், இக்குழுவினர் நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்திலும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கே.வசந்தரூபன், பாஸ்கரன், தமிழ்ச் செல்வன், சுமித்தி தங்கராசா, எஸ்.ரவிசாந்த்
கோப்பாய் |
சாட்டி |
உடுத்துறை |
வல்வெட்டித்துறை |
கனகபுரம் |
முள்ளியவளை |
முள்ளிவாய்க்கால் |
மன்னார் - பெரியபண்டிவிரிச்சான்.. |
மன்னார் - ஆண்டாங்குளம் .. |
கஞ்சிக்குடிச்சாறு |
ஆலங்குளம் |
புகைப்படங்கள் நன்றி வலைத்தளங்கள் ENB
No comments:
Post a Comment