Monday 27 November 2017

2002 இல் சிங்கள பாராளமன்றத்தை போர்க்களமாக்க அறைகூவல் விடுத்தவர்களின் இன்றைய அலறல்!

 2002 இல் சிங்கள பாராளமன்றத்தை போர்க்களமாக்க  அறைகூவல் விடுத்து, 2009 இல் போர்க்களம் கிளிநொச்சியை பாராளமன்ற
படுக்கை அறையாக மாற்றிய அரசியல் ஆய்வாளரின் இன்றைய அலறல்!

https://youtu.be/wRjHTp0zg9Y



அருள்குமார் என்கிற ஒரு வாசகரின் விமர்சனக் குறிப்புக்கு பக்க பலமாக பின்வரும் குறிப்புகள் இணைக்கப் படுகின்றன.

மையமான பிரச்சனைகள்

1) ஈழப்புரட்சியின் திசை வழி மற்றும் திட்டம் இன்று என்னவாக இருக்க வேண்டும்?

2) அதற்கு தலைமை தாங்கும் ஸ்தாபனம் எத்தகையதாக இருக்க வேண்டும்?

3) அந்த ஸ்தாபனத்துக்கு தலைமை தாங்கும் தத்துவம் எதுவாக இருக்க முடியும்?

4) பாராளமன்றப் பாதை பொருத்தமானதா?

5) அரசியல் போர்த்தந்திர பிரச்சார இயக்கத்தின் உடனடிக் கடமைகள் என்ன?

6) ஈழப்புரட்சியின் இராணுவ மார்க்கம் எது?

இவற்றுக்கு விடை காணுவது எமது அனைத்து விவாதங்களினதும் அடி நாதமாக இருக்க வேண்டும்.

இல்லையேல் அடுத்தகட்டத்துக்கு நம்மால் நகர முடியாது.

தோழமையுடன் சுபா

1 comment:

  1. Mylvaganam Arulkumar தரகுமுதலாளித்துவக் கட்சிகளும், வர்க்கங்களும் தேசீயக் கோரிக்கைகளின் விரோதிகள் ஆவர்.

    ஏகாதிபத்திய சுரண்டல் நலன்களைக் காப்பாற்றுவதே இவர்களின் வர்க்கநலன்களாக இருக்கும்.

    மூன்றாவது பகீரதப் பிரயத்தனத்தனத்தில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தை இதர தமிழீழப் பிராந்தியங்களிலிருந்து திட்டமிட்டுப் பிரித்து வைத்த , ஈழதேசத்தின் மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பின் மையமான ஆனையிறவுப் பெருந்தளம் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டு
    இலங்கையின் பொருளாதாரம் வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கணிய வீழ்ச்சி பெற்ற காலத்தில்....

    ஈழத்தேசத்தின் சுயநிர்ணய உரிமையைச் சட்டவிரோதமாக்கிய இலங்கை அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட அரசுமுறையின், அரசாங்கமான
    இலங்கைப் பாராளுமன்றத்திற்கு
    அரசியல் அநாதைகளாக்கப்பட்ட “கூட்டணிக்கும்பலை அனுப்பி வையுங்கள்...
    பாராளுமன்றத்தை அவர்கள் போர்க்களமாக்குவர்”

    என்று 2002 இல் திண்ணை என்ற பெயரில் IBC இல் முழங்கிய சோதிலிங்கம் மீண்டும் வருகின்றார்.

    போரியியக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட சலனத்தை முற்றுமுழுதாக பாராளுமன்ற சந்தர்ப்பவாத சகதிப் பாதையில் அழித்தொழித்து விடுவதற்கான வாயப்பாகக் கருதி

    “இலங்கைப் பாராளுமன்றத்தை கூட்ணியினரின் பிரதிநிதித்துவத்தோடு போர்க்களம் ஆக்குவோம்”
    என ஆய்ந்து அறிந்து கூறிய அரசியல் ஆய்வாளர் சோதிலிங்கம்
    மீண்டும் வருகின்றார்.

    அடுத்த தேர்தலில் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் கூட்டமைப்பை
    புறக்கணித்தால் மாற்றாக கஜேந்திரகுமார் அணியை பாராளுமன்றத்துக்கு அனுப்பவும்
    அதனூடாக இன ஒடுக்குமுறையின்
    மீது கட்டப்பட்ட பாராளுமன்ற முறைமையை தாங்கிப்பிடிக்கவும்
    மீண்டும் வருகின்றார்
    ஈழவிடுதலைப் புரட்சிகர இயக்கம் தனது தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு
    மீண்டு வந்து விடும் என்ற அச்சத்தில்
    பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத்
    தாங்கிப் பிடிக்க ஆய்வாளர் ஐயா அவர்கள் மீண்டும் வருகின்றார்.

    ஜனநாயக வழியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலான பொது வாக்கெடுப்பைக் கோருவதன் மூலமும்
    தமிழ்த்தேசம் விழித்தெழலாமென
    உணர்த்தி
    ஆய்வாளரின் வர்க்கசார்பை
    அம்பலப்படுத்துங்கள.

    ReplyDelete

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...