SHARE

Tuesday, May 09, 2017

ENB முள்ளிவாய்க்கால் முழக்கங்கள்-2017

ENB முள்ளிவாய்க்கால் முழக்கங்கள்-2017

* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நாடு கடந்த நிதியாதிக்க புல்லுருவிக் கும்பல்கள், ஏகாதிபத்திய உச்ச இலாப,சமூகவிரோத,அபரிமித அராஜக உற்பத்தி முறையின் நெருக்கடிக்கு தீர்வாக, உலகை மறு பங்கீடு செய்யும் நோக்கில் திட்டமிடும் மூன்றாம் உலகப் போரை தடுக்க குரல் எழுப்புவோம்!

* அமெரிக்க,பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் வடகொரியா மீதும்,சிரியா மீதும் ஏவும் உலகமறுபங்கீட்டு ஆக்கிரமிப்பு அநீதி யுத்தங்களை எதிர்ப்போம்!

* அகண்ட ஐரோப்பியக் கனவின் நிமித்தம் கிரேக்கம் உள்ளிட்ட சிறிய ஐரோப்பிய ஜூனியன் நாடுகளை,ஜேர்மானிய ஆளும் கும்பல் ஒட்டச் சுரண்டி சுடுகாடாக மாற்றுவதை எதிர்ப்போம்!

*ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,சிரியாவில் இருந்து அனைத்து அந்நியத் துருப்புகளையும் வெளியேறக் கோருவோம்! விரட்டியடிக்கும் நீதியான போராட்டங்களை ஆதரிப்போம்!

* மூன்றாம் உலகப் போரில் அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியான இந்திய விரிவாதிக்க அரசு, சிறீலங்காவினதும்,தமிழீழத்தினதும்,உள்விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி தலையிடுவதை நிறுத்த 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடுவோம்! 
  * ஈழத்தில் இந்தியா இழைத்த போர்க்குற்றங்களுக்கு தண்டனை அளிப்போம்! மோடி வருகையை   எதிர்ப்போம்!

* அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போர்க்குற்ற, ரணில் மைத்திரி,பொன்சேகா கும்பலுக்கு தண்டனை வழங்க ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு கோருவோம்!

* அரசியல் அமைப்புத் திருத்தம் என்கிற போர்வையில்,நாடு தழுவிய வாக்கெடுப்பு மூலம்,சிங்கள  ஆதிக்கத்தை ஈழம் மீது திணிக்கும் சதியை முறியடிப்போம்!
 
* இச்சதிக்கு துணை நிற்கும் கூட்டமைப்பு (TNA) துரோகிகளுக்கு தேர்தலைப் புறக்கணித்து பாடம் புகட்டுவோம்!

* `அகிம்சை,சமஸ்டி,அதிகாரப்பகிர்வு` பேசும் சமரசவாத ஏகாதிபத்திய `வர்ணப் புரட்சி`
NGO க்களைத் தனிமைப்படுத்துவோம்!

* முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் நிராயுதபாணியாக்கப்பட்ட ஈழ தேசம் மீது சிங்களம் கட்டவிழ்க்கும் தேசிய அபகரிப்பை,ஆக்கிரமிப்பை எதிர்த்து கிழர்ந்தெழுந்து தன்னியல்பாகப் போராடும், ஈழமக்களுக்கு, _ பிரிவினைப் பொது வாக்கெடுப்பை உயர்த்திப் பிடித்து _ புரட்சிகர தலைமை அளிப்போம்!

* ஈழப்பிரிவினை அரசியல் பிரச்சாரத்தை சட்டவிரோதமாக்கியுள்ள சிறிலங்கா அரசியல் யாப்ப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கப் போராடுவோம்!

*ஈழப் புரட்சியின் ஆதார அடித்தளமான,மலையக,இஸ்லாமிய,வட கிழக்கு தமிழர் ஒற்றுமையைக் கட்டிக்காக்க அயராது பாடுபடுவோம்!

*சிங்களம்,  சிங்கள மாணவர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் பாசிச உலக மய நல அடக்குமுறைகளை முன்னின்று கண்டிப்போம்!

* புலம்பெயர் ஏகாதிபத்திய தாச சமரசவாதிகளைத் தனிமைப்படுத்துவோம்!

*அரசியல் கைதிகள்- யுத்தக்கைதிகள் விடுதலை, களவாடி காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, நிலமீட்பு விவசாயப் பிரச்சனை, உள்ளிட்ட போர் மீண்ட தேசத்தின் மறுவாழ்வு உரிமைக்குப் போராடுவோம்!
*நாசகார,அராஜக, ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் காவலர்கள், கோடான கோடி ஆண்டுகளாக மானுடம் வாழப் பண்படுத்திய பூமிக் கிரகத்தின்  இருப்பை நூறே ஆண்டுகள் என்றாக்கி விட்டார்கள், சந்திரன் கிரக்கத்தில் தங்கம் தேடுகிறார்கள், பூமிக் கிரகம் காப்போம்!
* அணு ஆயுத உரிமையை அனைவருக்கும் இல்லாதாக்குவோம்!
* தற்கால கருத்துச் சுதந்திரம், தகவல் சுதந்திரம்,பிரச்சார சுதந்திரம் காப்போம்!
         * ஜூலியன் அசான், டேவிட் சுனோடன் சுதந்திரத்துக்குப் போராடுவோம்! 

ரசிய ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டு மே நாள் வாழ்க!
மே 18 ஈழ நாள் வாழ்க!
 
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே.
 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments:

Post a Comment

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...